கோயம்புத்தூர் மக்களே ரெடியா.. லூலூ மால்-க்கு போட்டியாக நெஸ்டோ ஹைப்பர்மார்ட்.. இனி ஷாப்பிங் அமர்க்களம்!

Subscribe to Oneindia Tamil

கோவை வேகமாக வளரும் 2வது நிலை நகரங்களில் முக்கியமானதாக மாறியிருக்கும் வேளையில், இந்த வர்த்தக சந்தையை பிடிக்க பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகிறது. இந்த நிலையில் ஜிசிசி நிறுவனங்களை தாண்டி பல ரீடைல் பிராண்டுகளும் கேவையை முக்கிய வர்த்தக டார்கெட் ஆக மாற்றியுள்ளது.

இந்த நிலையில் வளைகுடா நாடுகளில் பிரபலமாக விளங்கும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த நெஸ்டோ ஹைப்பர்மார்க்கெட், தனது 13-வது இந்திய கிளையை கோவையில் திறக்கத் தயாராகியுள்ளது. இதன் மூலம் கோவை, சர்வதேச ரீடைல் நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்கும் முக்கிய நகரமாக மீண்டும் ஒருமுறை அடையாளம் பெறுகிறது.

நெஸ்டோ ஹைப்பர்மார்க்கெட் கேரளாவில் 7 நரகங்களில் சுமார் 12 கிளைகளை வைத்திருக்கும் நிலையில் தற்போது தமிழ்நாடுக்கு லூலூ மால் பாதையை பாலோ செய்து வர துவங்கியுள்ளது.

Coimbatore Shopping LULU mall Nesto Hypermarket Coimbatore Nesto store Singanallur Nesto vs Lulu Coimbatore Nesto hypermarket Tamil Nadu Coimbatore retail boom Nesto 13th India store Lulu Mall Coimbatore competition Hypermarket in Coimbatore Nesto UAE retail India Coimbatore shopping destination 2026 vs 13 UAE 2026

சிங்காநல்லூரில் புதிய அடையாளம்

அடுத்த மாதம் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள செல்லாண்டி அம்மன் நகர் பகுதியில் நெஸ்டோ ஹைப்பர்மார்க்கெட் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், குவைத், சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வர்த்தகம் செய்து வரும் இந்த நிறுவனம், தற்போது தமிழ்நாட்டில் பெரிய விரிவாக்க முயற்சியை மேற்கொள்கிறது.

புதிய கடையில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள், ஆடைகள், மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், பேக்கரி மற்றும் சூடான உணவு பிரிவுகள் உள்ளிட்ட அனைத்தும் ஒரே கூரையின் கீழ் வழங்கப்பட உள்ளன.

கோவை ஏன் முக்கியமான சந்தை?

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தொழில் நகரமாக மட்டுமே பார்க்கப்பட்ட கோவை, தற்போது பெரிய அளவிலான நுகர்வோர் சந்தையாக உருவெடுத்துள்ளது. அவினாசி சாலையில் செயல்பட்டு வரும் லுலு ஹைப்பர்மார்க்கெட்டின் வெற்றி, கோவையின் வாங்கும் திறன் மற்றும் நவீன ஷாப்பிங் கலாசாரத்தை மக்கள் ஏற்றுக்கொள்வதை உறுதி செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக நெஸ்டோ போன்ற சர்வதேச நிறுவனங்கள் கோவையை இலக்காகத் தேர்வு செய்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.

லுலு - நெஸ்டோ போட்டி கோவையிலும்!

வளைகுடா நாடுகளில் லுலு மற்றும் நெஸ்டோ நிறுவனங்கள் நீண்ட காலமாக நேரடி போட்டியாளர்களாக இருந்து வருகின்றன. தற்போது அந்த போட்டி கோவையிலும் உருவாக உள்ளது.

சிங்காநல்லூர் பகுதியில் ஏற்கனவே டி மார்ட், ஸ்மார்ட் சூப்பர்ஸ்டோர் மற்றும் டென்னிஸ் ஹைப்பர்மார்க்கெட் போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தையில் நெஸ்டோ நுழைவதால் போட்டி மேலும் தீவிரமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+