கோவை ரிசார்ட்களுக்கு பறந்த நோட்டீஸ் - புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு செக்
கோவை: நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர். கோவை வனப்பகுதியில் உள்ள ரிசார்ட்களில் புத்தாண்டு கொண்டாட்டதில் ஈடுபட கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும் விதிகளை மீறி ஆனைகட்டி உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டி இயங்கும் ரிசார்டுகள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக கோவை மாவட்ட வனத்துறை ரிசார்ட்களுக்கு ஒரு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக வனத்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "உயர்நீதிமன்ற உத்தரவின்படி சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கும் பொருட்டு, இந்த உணர்திறன் வாய்ந்த பகுதிகளில் அமைந்துள்ள கேளிக்கை விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகளில் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகள், அதிக ஒளி எழுப்பும் விளக்குகள் மற்றும் பட்டாசுகள் பயன்படுத்த கூடாது. அதிகளவு கூட்டம் கூடி நெரிசல் ஏற்படுத்தி, வனத்துக்கும், வனவிலங்குகளுக்கும் தொந்தரவு செய்ய கூடாது.

வனத்துறை தடை
வனப்பகுதிக்கு அருகே உள்ள ரிசார்ட்களில் நெருப்பு வைத்து கேம்ப் பயர் வைக்க கூடாது. மது அருந்திவிட்டு வனப்பகுதியை ஒட்டிய சாலைகளில் பயணிக்க கூடாது. வனவிலங்குகள் தென்பட்டால் அதை பொது மக்களே விரட்டாமல், வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவோர் இரவு 8 மணிக்கு மேல் வனச்சாலைகளை பயன்படுத்த கூடாது.
புத்தாண்டு கொண்டாட்டங்களால் ஏற்படும் கழிவுகளை வனப்பகுதியில் கொட்ட கூடாது. அவற்றை உரியமுறையில் வெளியேற்ற வேண்டும். இந்த விதிகளை மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்ட ரிசார்ட் உரிமையாளர்கள், பொது மக்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், உயர்நீதி மன்ற உத்தரவை மீறிய விடுதிகள் பற்றி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்." என்று கூறியுள்ளனர்.
உணவு பாதுகாப்பு துறையும் நடவடிக்கை
இதேபோல உணவு பாதுகாப்புத்துறையினர் கடந்த வாரம் ஆனைகட்டி பகுதிகளில் உள்ள ரிசார்ட்களில் ஆய்வு செய்தனர். அதில் சுகாதாரமின்றி உணவு தயாரித்த மற்றும் விதிமுறைகளை பின்பற்றாத 4 ரிசார்ட்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். கடுமையான உத்தரவுகள் வந்தாலும் விதிகளை மீறி புத்தாண்டு கொண்டாட்டம் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications