கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள்.. கார் வெடிப்பு வழக்கில் கைதான 3 பேரை அழைத்து வந்து விசாரணை!
கோவை: கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை காவலில் எடுத்த என்.ஐ.ஏ அதிகாரிகள், அவர்களை கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் அருகேயுள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள சங்கமேஸ்வரர் கோயில் முன்பு, கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டிலிருந்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான வேதிப் பொருட்கள், ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவு வாசகங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இந்த கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முகமது உசேன், ஜமேசா மரி உள்ளிட்ட 3 பேரை கோவை அழைத்து வந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு முகமது உசேன், ஜமேசா மரி உள்ளிட்ட மூவரையும் அழைத்துச் சென்று என்.ஐ.ஏ விசாரணை நடத்தியுள்ளனர். ஏற்கனவே பலமுறை என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக கோவையில் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. என்.ஐ.ஏ விசாரணை காரணமாக கோவையில் பரபரப்பு நிலவி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications