கோவை, மதுரையில் என்ஐஏ அதிகாரிகள் ரெய்டு.. அதிகாலையில் அதிர்ந்த 8 மாவட்டங்கள்.. காரணம் என்ன?
கோவை: உக்கடம் பகுதியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். உக்கடம் பகுதியில் உள்ள ஏசி மெக்கானிக் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவையைத் தொடர்ந்து திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளிக்கு முன்பாக 23ஆம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ஐஏ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கார் குண்டு வெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் அவ்வப்போது சந்தேகத்திற்கு இடமான இடங்களில் சென்னை, கோவையில் சோதனை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் கோவை உக்கடம் பகுதியில் உள்ள அபிபுல் ரகுமான் என்பவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதே போல திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நெல்லை ஏர்வாடியைச் சேர்ந்த பக்ருதீன் என்பவர் வீட்டில் பரத் நாயக் என்ற தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். பக்ருதீன் என்பவர் பழனிபாபா அரசியல் எழுச்சி கடிச்சி கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் ஆவார்.
இதே போல திருச்சி, மதுரையிலும் அதிகாலை முதலே என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். நிதி வசூல், மூளை சலவை செய்தல், உபகரணங்கள கொடுத்து உதவுதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கோவை கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடைபவர்கள் என சந்தேகம் ஏற்படும் நபர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கோவை, நெல்லை பகுதிகளில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்துவது வழக்கமான ஒன்றாகும். கோவை கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக கருதப்படும் இடங்களில் இன்றைய தினம் என்ஐஏ சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications