மாறிய முகம்.. கோவையில் திடீரென கால் வலியால் துடிதுடித்த நிர்மலா சீதாராமன்! பதறிய தொண்டர்கள்
கோவை: கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரோடு ரோடு ஷோ சென்றார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது திடீரென்று கால் வலியால் துடிதுடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கோவை லோக்சபா தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் தான் அண்ணாமலைக்கு ஆதரவாக இன்று நிர்மலா சீதாராமன் கோவையில் வாக்கு சேகரித்தார்.

அதன்படி நிர்மலா சீதாராமன் வாகனத்தில் பேரணியாக சென்று பிரசாரம் செய்தார். நிர்மலா சீதாராமன், கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மற்றும் பாஜக எம்எல்ஏ வானதி ஆகியோர் திறந்த வாகனத்தில் நின்று தொண்டர்களை பார்த்து கையசைத்து ஓட்டு சேகரித்தனர்.
அதன்பிறகு நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் ‛‛கோவை தொகுதி பாஜக வேட்பாளராக உள்ள அண்ணாமலைக்கு இன்று மகளிர் அணி சார்பில் ஊர்வலம் நடந்தது. இதற்கு முன்பு பேசிய அண்ணாமலை, வானதி ஆகியோர், ‛மோடியின் ஒவ்வொரு நல திட்டங்களும் மக்களை போய் சேர்ந்துள்ளது' என்றனர். மேலும் அதில் பயன்பெற்றவர்கள் முன்வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.

உதாரணமாக இன்று காலையில் நீலகிரி (தனி) லோக்சபா தொகுதிக்குட்பட்ட அவிநாசி தொகுதியில் பெண்களிடம் நான் கருத்து கேட்டேன். அப்போது அவர்களுக்கு கிடைத்த மத்திய அரசு திட்டங்களை என்னிடம் கூறினார்கள். நான் பேச வேண்டிய திட்டங்களை பயனாளிகள் கூறி உள்ளனர். இதன்மூலம் மக்கள் திட்டங்கள் கீழ் மட்டம் வரை பொதுமக்களிடம் சேர்ந்துள்ளது. பிரதமர்மோடி திட்டம் வகுத்து பணம் மட்டும் கொடுக்கவில்லை. அதனை கடைசி வரைக்கும் கொண்டு போய் சேர்த்துள்ளார்'' என்றார்.
இந்த வேளையில் திடீரென்று நிர்மலா சீதாராமன்.. அய்யய்யோ.. என வலியால் துடித்து காலை பிடித்தார். நிர்மலா சீதாராமனை சுற்றி கட்சி நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் சூழ்ந்து நின்ற நிலையில் அவரது காலில் திடீரென்று அடிப்பட்டது. மேலும் அவர், ‛‛அது Fracture ஆன காலுப்பா'' என செய்தியாளரிடம் கூறி சிரித்தார். ஆனாலும் அவருக்கு காலில் வலி தொடர்ந்தது. மேலும் Fracture ஆன இடத்திலேயே அடிபட்டதை குறிக்கும் வகையில்‛‛Same Point'' என கூறினார். இதையடுத்த ரெஸ்ட் எடுத்த கொள்ளங்கள் என நிருபர் ஒருவர் கூறியபோது பரவாயில்லை என கூறி பேட்டியை தொடர்ந்தார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications