டாஸ்மாக்கில் மோனோபோலிக்கு செக்.. தவெக ஸ்கெட்ச்.. அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

கோவை: தவெக ஆட்சியமைத்து 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. கடந்த திமுக, அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் துறையில் ஏராளமான முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. தவெக ஆட்சியில் டாஸ்மாக் நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. டாஸ்மாக்கில் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் முறையும், டிஜிட்டல் பரிவர்த்தனையும் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான காரணத்தை துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் பணம் வசூலித்தால் காவல்துறை வழக்குப்பதிவு செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பு விபரங்களை நான் இன்னும் முழுமையாக படிக்கவில்லை. அதை பார்த்துவிட்டு பதில் அளிக்கிறேன்.

Tasmac

700க்கும் மேற்பட்ட ஆர்டர்கள்

வெளிநாட்டு மதுபானங்கள் ஏற்கனவே மதுபான கடையில் கிடைத்து கொண்டுதான் இருக்கிறது. இந்த துறையில் யாரும் மோனோ போலியாக இருக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். வாடிக்கையாளர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை கொடுக்க வேண்டியது கடமை. ஏற்கனவே பட்வைசர் குறித்து கேட்டார்கள். பாஸ்டர்ஸ் மதுவகை குறித்து கோரிக்கை குறித்து பரீசிலிக்கப்படும். ஆன்லைன் முறை குறித்து சட்டமன்றத்தில் விளக்கமாக பேசியுள்ளேன்.

நேரடி பண பரிவர்த்தனை இருக்க கூடாது என்பதற்காக ஆன்லைன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே ஸ்கேனர், கூகுள் பே போன்றவை இருந்துமே பாட்டிலுக்கு பத்து ரூபாய், இருபது ரூபாய் பிரச்சனை இருந்தது. அது இருக்கக் கூடாது என்பதற்காக இந்த ஆன்லைன் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அது நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஆன்லைன் புக்கிங்கும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இன்று (நேற்று) மட்டும் 700க்கும் மேற்பட்டோர் ஆர்டர் செய்துள்ளனர்.

சில பிராண்ட் சரக்குகள் மட்டும்

ஆர்டர் செய்வதிலும் சில பிரச்சனைகள் இருக்கிறது. இது ஒரு ஆரம்பகட்ட முயற்சி தான். இதில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை கவனிக்கிறோம். இதை வசதி ஏற்படுத்தி கொடுப்பதாக பார்க்க கூடாது. கூகுள் பே செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட நேரமாகும். அந்த நேரத்தை குறைத்துள்ளோம். வாடிக்கையாளர்கள் பில் வேண்டும் என்று கேட்கிறார்கள். அதற்கான ஒரு வாய்ப்பாக இதை கொண்டு வந்துள்ளோம்.

க்யூ ஆர் கோட் காட்டினால்தான் என்ன ஆர்டர் செய்துள்ளனர் என்பது தெரியும். ஆன்லைனில் மதுவகைகளை தேடிப் பார்த்து வாங்குவது, தங்களுக்கு வேண்டும் என்கிற மதுவை வாங்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது தான் இதன் நோக்கம். சில கடைகளில் சில பிராண்ட் சரக்குகள் மட்டுமே விற்கின்றனர். சில சரக்குகளை மட்டும் விக்க முயற்சிக்கின்றனர். அந்த புகார்களின் அடிப்படையில் ஆன்லைன் முறை கொண்டு வரப்பட்டது.

அதிசய பொருள் கிடையாது

எந்தெந்த கடையில் என்னென்ன மது வகைகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். வாடிக்கையாளர்களாக பார்க்கும்போது என்னென்ன பிராண்ட் இருக்கிறது என்று சொல்ல வேண்டியது கடை நடத்துவோரின் பொறுப்பு. என்னென்ன சரக்கு இருக்கிறது என வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்கிறார்கள். கடந்த காலங்களில் இந்த துறையை சரிப்படுத்த முயற்சி எடுக்கவில்லை. இதை சரி செய்வதற்காக நாங்கள் வந்திருக்கிறோம்.

கடந்த இரண்டரை மாதங்களில் டாஸ்மாக் துறை குறித்து தொடர்ச்சியாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கும் இது அதிசயமான பொருள் கிடையாது என்பதை தெரியப்படுத்த வேண்டும். கேரளாவில் இந்த விழிப்புணர்வு இருக்கிறது. தமிழகத்தில் அந்த விழிப்புணர்வை கொண்டு வர வேண்டும். வசதி ஏற்படுத்துவது ஊக்குவிப்பது கிடையாது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+