முதுகுவலியால் அவதிப்படும் ஓ.பன்னீர்செல்வம்... ஆயுர்வேத மருத்துவமனையில் புத்துணர்வு சிகிச்சை..!
கோவை: கடந்த சில நாட்களாகவே முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கோவையில் உள்ள பிரபல ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றில் புத்துணர்வு சிகிச்சை பெற்று வருகிறார்.
நீராவி குளியல், மண் சிகிச்சை, ஒத்தடம் உள்ளிட்ட சிகிச்சைகள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அங்கு அளிக்கப்பட்டு வருகின்றன.
ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக இன்னும் ஒரு வாரத்திற்காவது ஓ.பன்னீர்செல்வம் கோவையில் தங்கியிருப்பார் எனத் தெரிகிறது.

முதுகு வலி
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நீண்ட நாட்களாகவே முதுகு வலி இருந்து வருகிறது. இதற்கு ஆங்கில மருத்துவ முறை சிகிச்சையில் முழு பலன் கிடைக்காததாலும், ஆங்கில வலி மருந்துகளினால் பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும் என்ற ஐயத்தினாலும் அவர் ஆயுர்வேத சிகிச்சைக்கு மாறிவிட்டார். ஏற்கனவே கோவையில் இதற்காக பிரத்யேக சிகிச்சை பெற்று ஓரளவு முதுகுவலியிலிருந்து விடுபட்டிருக்கிறார்.

கேரள மருத்துவம்
இந்நிலையில் இப்போது அலைச்சல் அதிகரித்த காரணத்தால் மீண்டும் அவருக்கு முதுகு வலி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து கோவை பீளமேட்டில் இயங்கி வரும் பிரபல ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சை பெறத் தொடங்கியிருக்கிறார். கேரள பாரம்பரிய வைத்திய முறைப்படி அங்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. குறைந்தது இன்னும் ஒரு வாரத்திற்காவது ஓ.பி.எஸ். கோவையில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உடல் பயிற்சி
இதனிடையே தனிப்பட்ட முறையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால் கட்சியினர் யாரும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க வரவேண்டாம் என்றும் கட்சியினரும், அன்பினரும் திரண்டால் அது ஆயுர்வேத மருத்துவமனையில் உள்ள மற்ற நோயாளிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி விடக்கூடும் எனவும் அவர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு உடல் பயிற்சி முறைகளும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.

அலைச்சல் அதிகம்
மனைவி இறந்த துக்கத்திலிருந்து ஓ.பி.எஸ். இன்னும் முழுமையாக மீளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மறைவை தொடர்ந்து ஆறுதல் தெரிவிக்க வந்தோரை சந்திப்பதற்காக நாள்தோறும் 10 மணி நேரத்துக்கும் அதிகமாக அவர் ஒரே இடத்தில் அமர்ந்திருந்ததும், உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்துக்காக 9 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ததும் முதுகு வலி திடீரென அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications