Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா ஊசி போடாத கொங்கு மணப்பெண்! பேப்பரில் வந்த விளம்பரம்! போனை போட்டால் புலம்பும் நபர்!

Subscribe to Oneindia Tamil

கோவை: சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக ஒரு பத்திரிகை விளம்பரம் உலாவி வருகிறது. கொரோனா வேக்சின் போட்டுக் கொள்ளாத கொங்கு மணமகள் தேவை என அந்த விளம்பரத்தில் சொல்லப்பட்டிருந்தது. தொடர்ந்து அது சமூக வலைதளங்களில் விமர்சனத்தை பெற்ற நிலையில், அதில் குறிப்பிட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்ட போது எதிர்முனையில் பேசிய நபர் புலம்பித் தள்ளினார். என்ன நடந்தது என சற்று விரிவாக பார்க்கலாம்..

தமிழகத்தில் வரன் தேடுவதற்கு என்று பல முகவர்கள் இருக்கிறார்கள். முதலில் சொந்தத்தில் பார்த்து திருமணம் முடித்த காலம் எல்லாம் போய்விட்டது. படிப்பு, பணம், பதவி என சில முக்கிய அடிப்படை தகுதிகளை எதிர்பார்த்து நடக்கும் திருமணங்களுக்கு திருமண தகவல் மையங்கள் தான் மையப் புள்ளியாக இருக்கிறது.

இணையதளம் வளர்ந்து விட்ட நிலையில் மேட்ரிமோனியல் வெப்சைட்டுகளும் புற்றீசல் போல முளைத்துள்ளன. இருந்த போதும் பேப்பரில் விளம்பரம் கொடுத்து பெண் பார்ப்பதும் தற்போதும் நடைமுறையில் இருக்கிறது.

Covai Bride twitter

எந்த நாளிதழ்களை திறந்தாலும் எட்டாம் பக்கத்தில் 50க்கும் மேற்பட்ட மணமகன் தேவை, மணமகள் தேவை விளம்பரங்களை பார்க்க முடியும். அரிதாக சாதி மதம் தேவையில்லை என ஒன்று இரண்டு விளம்பரங்கள் இருக்கும். ஆனால், பெரும்பாலானவை சாதியை குறிப்பிட்டு இருக்கும். அப்படி ஒரு விளம்பரம் தான் சமூக வலைதளங்களில் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த பத்திரிகை விளம்பரத்தில் "மணமகள் தேவை" என குறிப்பிடப்பட்டு," கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தைச் சேர்ந்த படித்த வசதியான வரனுக்கு அதே இனத்தைச் சேர்ந்த கொரோனா வேக்சின் போட்டுக் கொள்ளாத மணமகள் தேவை" என ஒரு தொலைபேசி எண்ணும் அளிக்கப்பட்டு இருந்தது.

பலரும் சமூக வலைதளங்களில் இந்த விளம்பரத்தை பகிர்ந்து கேள்வி கேட்டு வந்தனர். சாதி ரீதியாக மணமக்கள் பார்ப்பது வழக்கம் தானே என்ற கேள்வி எழுந்தாலும், கொரோனா ஊசி போட்டுக் கொள்ளாத மணமகளை ஏன் கேட்கிறார்கள்? என்ற கேள்வி பலமாக எழுந்தது. ட்விட்டரில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக இந்த விளம்பரம் தான் அதிகமாக விவாதத்திற்கு உள்ளானது.

சரி எதற்காக இந்த விளம்பரத்தை கொடுத்தார்கள் என அதில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது தான் அதிர்ச்சி காத்திருந்தது. எதிர்முனையில் பேசிய நபர்," சார் என் பெயரை போட்டுடாதீங்க" என சொல்லிவிட்டே பேச ஆரம்பித்தார். கோவையைச் சேர்ந்த அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்த தொலைபேசி எண்ணை வாங்கி இருக்கிறார். ஆனால் விளம்பரம் கொடுத்தவர்கள் அதற்கு முன்னே இந்த செல்போன் எண்ணை வைத்திருக்கிறார்கள்.

ஏர்டெல் நிறுவனத்தை சேர்ந்த அந்த எண்ணை சரண்டர் செய்துள்ளனர். பிறகு jioவில் இந்த எண் மாற்றப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த எண்ணை வைத்திருப்பவர் தான் இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். சம்பந்தமே இல்லாமல் "ஃபோன் பண்ணி என்ன திட்டுறாங்க.. அடிக்கடி என்னை கேள்வி கேட்கிறாங்க சார்.. என்ன பண்றதுன்னு தெரியல.. பழைய நம்பரை விளம்பரம் கொடுத்துட்டு என்கிட்ட நம்பர் தள்ளி விட்டுட்டாங்க.. ஒரே கஷ்டமா இருக்கு.. வேற வழியில்ல இந்த நம்பரையே நான் மாற்ற போறேன்" என புலம்பி புலம்பினார்.

உண்மையில் இந்த விளம்பரம் பழைய விளம்பரம் தான் பிரபலமான ஒரு நாளிதழில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு ஐந்தாம் மாதம் 24 ஆம் தேதி இந்த விளம்பரம் கொடுக்கப்பட்டிருப்பது அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பழைய விளம்பரத்தை புதுசு என்று தற்போது வரை பலரும் பரப்பி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+