போச்சு.. கொங்கு கோட்டையில் சங்கு! சடசடவென சரியும் வாக்காளர் எண்ணிக்கை! மொத்தம் இத்தனை பேர் நீக்கமா?
கோவை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் முழுவதும் எதிர்பாராத வகையில் அதிகமான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.குறிப்பாக, கோவை மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சரிபார்ப்பு பணியில், இதுவரை 5.06 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தேர்தல் ஆணையம் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலை புதுப்பித்தாலும், இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும் 'சிறப்பு தீவிர திருத்தம்' மிக விரிவாகவும், தீவிரமாகவும் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி தேர்தல் ஆணைய அதிகாரிகள் வீடு வீடாக சென்று நேரடியாக கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தப் பணி நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய நிலையில், டிசம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் முழுமையான தரவுகளை உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணையம் இந்த காலக்கெடுவை டிசம்பர் 11ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தம்
தற்போது, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பொறுப்பான BLO அதிகாரிகள் கணக்கெடுப்பு படிவங்களை வாக்காளர்களிடம் வழங்கி, அந்த படிவங்களை பூர்த்தி செய்து திரும்பப் பெறுகின்றனர். வாக்காளர்கள் தங்கள் குடும்ப விவரங்கள், முகவரி, ஆதார் இணைப்பு உள்ளிட்ட தேவைப்படும் தகவல்களை வழங்கிய பின், BLO-கள் அந்தப் படிவங்களை சரிபார்த்து, அவர்களுக்கென வழங்கப்பட்ட சிறப்பு மொபைல் செயலியில் ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். இந்த பதிவேற்றம் செய்யப்பட்டால்தான் டிசம்பரில் வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் அந்த நபரின் பெயர் இடம்பெறும்.
கோவையில் நீக்கப்பட்ட பெயர்கள்
இந்நிலையில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி வேகமாக நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் முழுவதும் ஏராளமான பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், இதுவரையிலான கணக்கெடுப்பில் 6.37 கோடி படிவங்கள் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த மாத இறுதியில் கிடைத்த தரவுகளின் படி, மாநிலம் முழுவதும் 24 லட்சம் இறந்த நபர்களின் பெயர்கள் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வாக்காளர் பெயர் நீக்கம்
குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 3,117, BLO அதிகாரிகள் மூலம் நடைபெறும் இந்தத் திருத்தப் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இருமுறை பட்டியலில் இருப்பவர்கள், படிவங்கள் அளிக்காதவர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் நீக்கப்படுகின்றன. அதன்படி கோவை மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 5.06 லட்சம் பேர் நீக்கம் செய்யப்படவுள்ளன.
கோவை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை:
மேட்டுப்பாளையம் - 41,079
சூலூர் - 43,465
கவுண்டம்பாளையம் - 64,072
கோவை வடக்கு - 66,525
தொண்டாமுத்தூர் - 70,049
கோவை தெற்கு - 46,894
சிங்காநல்லூர் - 54,354
கிணத்துக்கடவு - 58,545
பொள்ளாச்சி - 31,720
வால்பாறை - 29,691
மொத்தம்: 5,06,394 பேர்
உயிரிழந்தவர்கள் மட்டும் 1.13 லட்சம் பேர்
ஒவ்வொரு தொகுதியிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை:
மேட்டுப்பாளையம் - 13,504
சூலூர் - 10,125
கவுண்டம்பாளையம் - 11,646
கோவை வடக்கு - 13,935
தொண்டாமுத்தூர் - 9,136
கோவை தெற்கு - 9,359
சிங்காநல்லூர் - 16,329
கிணத்துக்கடவு - 14,332
பொள்ளாச்சி - 8,561
வால்பாறை - 6,754
மொத்தம்: 1,13,861 பேர்
இருமுறை பெயர், முகவரி மாற்றம் போன்ற காரணங்களால் நீக்கப்பட்டவர்கள் - 3.92 லட்சம்
மேட்டுப்பாளையம் - 27,575
சூலூர் - 33,340
கவுண்டம்பாளையம் - 52,426
கோவை வடக்கு - 52,590
தொண்டாமுத்தூர் - 60,913
கோவை தெற்கு - 37,355
சிங்காநல்லூர் - 38,025
கிணத்துக்கடவு - 44,213
பொள்ளாச்சி - 23,159
வால்பாறை - 22,937
மொத்தம்: 3,92,533 பேர்
நேற்றைய நிலவரப்படி தான் இந்த எண்ணிக்கை எனவும், 11ஆம் தேதிவரை இந்த பணிகள் தொடர்ந்து நடக்கும் என்பதால் திருத்தப் பணி இன்னும் முழுமையாக முடிவடையாததால், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் பெயர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்!












Click it and Unblock the Notifications