கோவை டூ பாலக்காடு.. வாளையாறு சோதனைசாவடியில்.. லாரி டிரைவர்கள் தந்த மறக்க முடியாத ட்விஸ்ட்
கோவை: பாலக்காடு மாவட்டம் புதுசேரியில் ஜவஹர் நகர் பகுதியை சேர்ந்த சுமன். பாலக்காடு ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் நுண்ணறிவு அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமன் தலைமையிலான குழுவினர் வாளையாறு சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை செய்தார். அப்போது சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்றி வந்ததற்கு அபராதம் விதிக்காமல் இருக்க ரூ.3.5 லட்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து லஞ்சம் வாங்கியதாக ஜி.எஸ்.டி. அதிகாரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் புதுசேரியில் ஜவஹர் நகர் பகுதியை சேர்ந்த 55 வயதாகும் என்பவர் பாலக்காடு ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் நுண்ணறிவு அதிகாரியாக பணியாற்றி வந்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமன் தலைமையிலான குழுவினர் வாளையாறு சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை நடத்தினார்கள்.

அப்போது வாளையாறு சோதனைச்சாவடி வழியாக வந்த 2 சரக்கு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது பழைய இரும்பு பொருட்களை அதிகளவில் ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் 2 சரக்கு வாகனங்களையும் பறிமுதல் செய்து குறிப்பிட்ட தொகை அபராதம் விதித்தனர்.
இதற்கிடையே வாகனங்களை விடுவித்து அபராதமும் விதிக்காமல் இருக்க டிரைவர்கள் மூலம் சரக்கு வாகன உரிமையாளரிடம் அதிகாரி சுமன் ரூ.4 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரூ.3.5 லட்சம் என பேரம் பேசப்பட்டது. இருப்பினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத சரக்கு வாகன உரிமையாளர் டிரைவர்களுடன் பாலக்காடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதையடுத்து அவர்கள் ரசாயனம் தடவிய பணமாக ரூ.3½ லட்சத்தை சரக்கு வாகன உரிமையாளரிடம் வழங்கி, அதனை சுமனிடம் கொடுக்கும்படி சில ஆலோசனைகள் கூறி அனுப்பி வைத்தார்கள்.
இந்தநிலையில் நேற்று மதியம் சரக்கு வாகன உரிமையாளர், சுமனை புதுசேரி குருடிக்காடு பகுதிக்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளும்படி கூறினார். அதன்படி அவரும் அங்கு வந்து காத்து இருந்தார். இதையடுத்து சிறிதுநேரத்தில் அங்கு வந்த சரக்கு வாகன உரிமையாளர் ரூ.3½ லட்சத்தை சுமனிடம் கொடுத்தார். அதனை சுமனும் வாங்கிக்கொண்டார்.
இதற்கிடையே லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் லாரி டிரைவர்கள் வேடத்தில் வந்து அங்கு மறைந்து நின்றனர். தொடர்ந்து லஞ்சம் வாங்கிய சுமனை கையும், களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தார்கள். மேலும் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாலக்காடு ஜவஹர் நகரில் உள்ள சுமனின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications