பரிதாப நிலையில் கோவை.. ஒரே ஆண்டில் இப்படியா.. குமுறும் பொதுமக்கள்.. அடடே என்ன இப்படி ஆகிடுச்சு
கோவை: தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட நிலையில், இதில் கோவைக்குக் கிடைத்த ரேங்க் என்பது மிகப் பெரிய பேசுபொருள் ஆகியுள்ளது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சமீபத்தில் 2023ஆம் ஆண்டிற்கான தூய்மையான நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தாண்டு மொத்தம் 446 நகரங்களை ஆய்வு செய்து இந்த லிஸ்டை உருவாக்கியுள்ளனர்.

இந்த லிஸ்ட் வந்தவுடன் தமிழ்நாட்டில் அனைவருக்கும் அதிர்ச்சி தான்.. ஏனென்றால் தமிழ்நாட்டில் இருந்து எந்தவொரு நகரமும் இதில் டாப் 100 இடங்களில் வரவில்லை.
கோவை எங்கே: அதேபோல இந்தப் பட்டியலில் கோவை 182ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கோவை நகரம் கடந்த 2022ஆம் ஆண்டில் 42ஆவது இடத்தில் இருந்த நிலையில், இந்தாண்டு அது 140க்கும் மேற்பட்ட இடங்கள் பின் தள்ளப்பட்டுள்ளன.
446 நகரங்களைக் கொண்ட இந்த பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டில் இருந்து எந்தவொரு நகரமும் இல்லை என்பது மோசமான சாதனையாகும். மற்ற நகரங்களைக் காட்டிலும் கோவை டாப் 100இல் இருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டது தான் அனைவருக்கும் அதிர்ச்சி. கோவை ஒரே ஆண்டில் மிக மோசமாகச் செயல்பட்டு 182ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர்கள்: கோவை முனிசிபல் கார்ப்பரேஷனின் மோசமான திட்டமிடல்தான் இந்த ரேங்கில் ஏற்பட்ட கடுமையான சரிவுக்குக் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், "நகரம் மற்றும் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றக் கோவை முனிசிபல் கார்ப்பரேஷன் எந்தவொரு தீவிர நடவடிக்கையையும் எடுக்கவில்லை
கோவை இப்போது முழுக்க குப்பை நகரமாக மாறியுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் கூட கோவை மாநகராட்சியின் மோசமான திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது. குளிர்காலத்தில் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் இருந்து காலை நேரங்களில் துர்நாற்றம் வீசுகிறது. அந்தளவுக்கு அங்கே நிலைமை மோசமாக இருக்கிறது.
புரிதல் இல்லை: ஏதோ சில இடங்கள் சரிந்து இருந்தால் கூட அதை நாம் ஏற்றுக் கொண்டு இருக்கலாம். ஆனால், 42ஆம் இடத்தில் இருந்து 182க்கு சென்றதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நகரத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டமிடுவது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகளுக்கு சரியான புரிதல் இல்லை" என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து கோவை மாநாகரட்சி கமிஷனர் எம் சிவகுரு பிரபாகரன் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பேட்டியில், "கழிவு பதப்படுத்துதல் மற்றும் சேகரிப்பு ஆகிய பிரிவுகளில் நாங்கள் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளோம். இதன் காரணமாகவே நமது தரவரிசை குறைந்துள்ளது. இந்தப் பிரச்சினையைச் சரி செய்ய நுண் உரமிடும் மையங்கள் உள்ளிட்டவற்றைப் புதுப்பித்து இயக்க திட்டமிட்டுள்ளோம்.
திடக்கழிவு மேலாண்மை: மேலும் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த பயோமைனிங் திட்டம் மற்றும் பயோ கேஸ் ஆலைகள் அமைப்பதற்கான திட்டங்களை அரசுக்கு அனுப்பியுள்ளோம். விரைவாகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். அடுத்தாண்டு தரவரிசையில் டாப் மீண்டும் நல்ல முன்னேற்றத்தைக் காட்டுவோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு தூய்மையான நகரங்கள் பட்டியலில் இந்தூர் மற்றும் சூரத் ஆகியவை முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தூர் தொடர்ந்து முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது தொடர்ந்து நவி மும்பை இதில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்த லிஸ்டில் டாப் 100 இடங்களில் தமிழ்நாட்டில் இருந்து எந்தவொரு நகரமும் இல்லை என்பதே துரதிருஷ்டவசமானதாகும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications