மேற்கு மண்டலத்தின் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்!
பேரூர்: கோவை மாவட்டம் பட்டீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. இந்த குடமுழுக்கை தமிழில் நடத்த பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
மேற்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் என்றால் அது பேரூர் பட்டீஸ்வரர் கோயில் ஆகும். இங்கு கும்பாபிஷேக விழா கடந்த 4 ஆம் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. பிறகு அஷ்டமூர்த்தி ஹோமமும் ஸம்ஹிதா ஹோமமும் நடந்தது.

இதையடுத்து புனித மண் எடுத்தலும் நடந்தது. பிறகு 96 வகையான மூலிகை திரவியங்கள் தெளிக்கப்பட்டது. பல தலங்களில் இருந்து வரும் ஓதுவாமூர்த்திகள், பன்னிரு திருமுறை விண்ணப்பம் செய்தனர். நாள்தோறும் காலையும் மாலையும் யாகசாலை பூஜை நடந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் காலை 9.50 மணி முதல் 10.05 மணி வரை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோயில் கும்பாபிஷேகத்தின் போது புனித நீர் கலசங்களை ராஜகோபுரம், சன்னதிகளின் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் கோவிலின் மேல் தளத்தில் பக்தர்கள் நின்று பார்வையிடவும் தற்காலிக இரும்பு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயில் மேல் தளத்தில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இரும்பு படிக்கட்டுகள் உறுதியாக அமைக்கப்பட்டுள்ளதா என்பதை நேற்று இரவு பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வந்தன. மேலும் இன்றைய தினம் கும்பாபிஷேகத்தையொட்டி பேரூரில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications