தங்கம் + கடிதம்.. பாலக்காட்டில் 21 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த நகை பார்சலில்.. இன்ப அதிர்ச்சி
கோவை: இன்றைக்கு தங்கம் ஒரு பவுன் செய்கூலி சேதாரம் எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டது. இப்படியான சூழலில் பாலக்காட்டில் 21 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்துபோன நகை உரியவருக்கு பார்சலில் வந்திருக்கிறது. அதில் இருந்த கடிதத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் தொலைத்த நகை என்னிடம் கிடைத்தது. ஆனால் அப்போது அனுப்ப முடியவில்லை என்று கூறியிருந்தார். தொலைந்த நகையை கண்டு, தாய், மகன் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
தங்க நகை ஒரு பவுன் 80 ஆயிரத்தை தாண்டிவிட்டது. செய்கூலி சேதாரம் எல்லாம் சேர்த்து இன்றைக்கு ஒரு லட்சத்திற்கு நெருங்கி போய்விட்டது. தங்க நகை விரைவில் ஒரு சவரன் ஒன்றரை லட்சம் வரை போகும் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் கடுமையான வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட கடுமையான சரிவு போன்ற காரணங்களால், பங்கு சந்தையில் முதலீடு குறைந்து தங்கத்தில் முதலீடு அதிகரித்து வருகிறது . இதனால் இல்லத்தரசிகள் தங்கத்தை நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு விலை ஏறிக்கொண்டே செல்கிறது. யாராவது ஸ்பீட் பிரேக் போடுங்கள் என்று கூறும் அளவிற்கு நிலைமை மாறி உள்ளது.

தங்க சங்கிலி தொலைந்தது
இப்படியான சூழலில் தங்க நகை அடங்கிய பார்சல் 21 வருடங்களுக்கு பிறகு திரும்பி கிடைத்துள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் திருவேகப்புறம் அருகே பைலிப்புறம் பட்டன்மாருதொடி பகுதியில் 65 வயதாகும் கதீஜா, தனது மகன் இப்ராஹிமுடன் வசித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு வலாஞ்சேரி பெரியகுன்னு பகுதியில் உள்ள டாக்டரை பார்க்க பேருந்தில் சென்றிருந்தனர். அந்த பயணத்தின் போது, கதீஜாவின் 3.5 பவுன் தங்க சங்கிலி தவறி விழுந்து தொலைந்து போய்விட்டது.
கூரியரில் பார்சல்
பின்னர் அவர்கள் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுபற்றி கதீஜா தனது கணவரிடம் தெரிவித்தார். இதையடுத்து வெளிநாட்டில் இருந்த மற்றொரு மகன் புதிய நகை வாங்கி தாயிடம் கொடுத்துள்ளார். இதனால் தொலைந்து போன நகை பற்றி போலீசில் புகார் கொடுக்கவில்லை. இந்தநிலையில் இப்ராஹிமின் செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது எதிர்முனையில் பேசிய நபர், உங்களுக்கு கூரியரில் பார்சல் வந்துள்ளது. வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என கூறியிருக்கிறார்.
பார்சலில் தங்கம்
தனது குழந்தைகள் ஆன்லைனில் ஏதாவது ஆர்டர் செய்து இருக்கலாம் என நினைத்து இப்ராஹிம் கூரியர் நிறுவனத்துக்கு சென்றுள்ளார். அங்கு பார்சலை பெற்று கொண்டு வீட்டுக்கு வந்து, அதை பிரித்து பார்த்துள்ளார். அப்போது உள்ளே ஒரு கடிதமும், தாளில் சுருட்டி வைக்கப்பட்ட நகையும் இருந்தது. இதை கண்ட இப்ராஹிம் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
3.5 பவுன் தங்கம்
அந்த கடிதத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் தொலைத்த நகை என்னிடம் கிடைத்தது. அப்போது எனக்கு ஏற்பட்ட பொருளாதார பிரச்சினையால் அந்த நகையை பயன்படுத்த வேண்டி இருந்தது. தற்போது அதற்காக மிகவும் வருந்துகிறேன். அந்த நகைக்கு பதிலாக, அதே மாதிரியான 3.5 பவுன் தங்க சங்கிலியை அனுப்பி வைத்து உள்ளேன். இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளவும். என்னை மன்னிக்கவும் என்று கூறியிருந்தார்.
பாலக்காட்டில் நெகிழ்ச்சி
இதைத்தொடர்ந்து கதீஜா, இப்ராஹிம் நகையை பார்த்த போது, அது உண்மையான தங்கம் என்பது உறுதியானது. 21 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த நகை மீண்டும் வேறொரு வடிவில் கிடைத்ததால் அவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். மேலும் நகையை திருப்பி அனுப்பியவர் யார்? என்பதை அறிய விருப்பமில்லை என்று இப்ராஹிம் கூறினார். தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், 21 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன நகையை , எடுத்தவரே மீண்டும் அனுப்பி வைத்த சம்பவம் பாலக்காட்டில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications