அசராமல் ஆடுறாங்களே யப்பா.. அதிமுக 'ஆதரவுடன்' 2024-ல் டெல்லி செங்கோட்டையில் மோடி கொடி ஏற்றுவார்!
கோயம்புத்தூர்: 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக ஆதரவுடன் மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்; டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றுவார் என அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் தெரிவித்துள்ளார்.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியேற்றி வைத்து நீண்ட உரையாற்றினார். அப்போது, 2024-ம் ஆண்டு மீண்டும் இதே டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றுவேன்.. அப்போது நாட்டுக்கான திட்டங்களை விரிவாக பட்டியலிடுவேன் என கூறியிருந்தார். பிரதமர் மோடியின் இந்த பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரதமர் மோடி 2024-ம் ஆண்டு வீட்டில்தான் தேசிய கொடி ஏற்றுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார். பிரதமர் மோடியின் பிரிவு உபசார பேச்சு இது என ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கிண்டலடித்தார். இதே கருத்தை ஆம் ஆத்மி கட்சியும் தெரிவித்திருந்தது. இதற்கு பாஜக தலைவர்கள் பதிலடி தந்து வருகின்றனர். காங்கிரஸ் எம்பி வேணுகோபால் கூறுகையில், 2024-ல் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். மக்கள்தான் தீர்மானிப்பார்கள் என்றார்.
#WATCH | Chennai: "It is NDA which will form the government in 2024 at the Centre and PM Modi will once again hoist the national flag with the support of AIADMK as it is one of their strongest allies...Probably for solace, Mallikarjun Kharge since he is experienced in hoisting… pic.twitter.com/KgMdkLOoWf
— ANI (@ANI) August 15, 2023
தற்போது இந்த பஞ்சாயத்தில் அதிமுகவும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவின் செய்தித் தொடர்பாளரான கோவை சத்யன், ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 2024-ம் ஆண்டு அதிமுக ஆதரவுடன் மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும். பிரதமர் வேட்பாளர் மோடி மீண்டும் "செங்கொடி" ஏற்றுவார். பாஜகவின் முக்கியமான கூட்டணி கட்சி அதிமுக. அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் இருந்தே கொடி ஏற்றிப் பழக்கப்பட்டவர் என்பதால் அதனையே மற்றவர்களிடமும் எதிர்பார்க்கிறார் போல. ஆனால் அப்படி எதுவும் நடக்கப் போவது இல்லை. இவ்வாறு அதிமுகவின் கோவை சத்யன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications