கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மருதமலை முருகனுக்கு அரோகரா.." கோவை பொதுக்கூட்டத்தில் தமிழில் உரையை தொடங்கிய மோடி

Google Oneindia Tamil News

Recommended Video

    Modi Speech:கோவை பொதுக்கூட்டத்தில் தமிழில் உரையை தொடங்கிய மோடி

    கோவை: பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து கோவை கொடீசியா மைதானத்தில் நடைபெறும் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசி வருகிறார்.

    அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள, பாஜக, தமிழகத்தில் கோவை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மற்றும் சிவகங்கை ஆகிய ஐந்து தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    PM Narendra Modi arrives Coimbatore

    இதையடுத்து கோவையில் பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளார். இவரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக கொடிசியா மைதானத்தில் பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஏற்பாடு செய்துள்ளன. இதில் பங்கேற்பதற்காக, இரவு 7 மணியளவில் தனி விமானத்தில் கோவை வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

    7.15 மணியளவில் கொடிசியா மைதானத்தில் துவங்கி பொதுக்கூட்டத்தில், அவர் பங்கேற்று உரை நிகழ்த்தி வருகிறார். முன்னதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    நரேந்திர மோடி "வணக்கம்" என தமிழில் கூறி உரையை ஆரம்பித்தார். "மருதமலை முருகனுக்கு அரோகரா" என்றும் மோடி கூறி தனது பேச்சை ஆரம்பித்தார். மோடி உரையிலிருந்து: கல்வி வளமும், தொழில் வளமும் மிக்க கோவையில், உங்களிடம் பேசுவதற்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழரும், தமிழர் பண்பாடும் மிகவும் பெருமை மிக்கது. உலகிலேயே மூத்த மொழி தமிழ் மொழி.

    தமிழர் பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது. இன்னும் சில நாட்களில் நீங்கள் புத்தாண்டை கொண்டாட உள்ளீர்கள். நான் இப்போதே தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

     பிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு! பிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

    அதே நேரத்தில் சிறப்புமிக்க தலைவரான எம்ஜிஆர் மற்றும் அம்மா ஜெயலலிதா அவர்களுக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது எண்ணங்கள் நம்மை வழிநடத்தும்.

    இந்தியா 21வது நூற்றாண்டில் எந்த திசையில் செல்லப் போகிறது என்பதை இந்த லோக்சபா தேர்தல் முடிவு செய்யப் போகிறது. ஸ்திரமான அரசு அமைய வேண்டும் என்பது தேசிய ஜனநாயக கூட்டணியின் நோக்கம். ஆனால் தொங்கு லோக்சபா அமைந்து அதன் மூலமாக அதிகாரத்தை சுவைக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிக் கூட்டணியின் விருப்பம். இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

    English summary
    PM Narendra Modi arrives Coimbatore for participate in the election rally for BJP candidate CP Radhakrishnan and the Narendra Modi will deliver the address to the gathering.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X