ஓடும் ரயிலில் பயணி செய்த காரியம்.. அலறியடித்து எழுந்த இளம்பெண்.. என்ன நடந்ததுன்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

கோவை: பாலக்காடு - சாலிமர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை கொண்டிருந்த இளம்பெண்ணிடம் 42 வயது நபர் செய்த காரியத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட அந்த நபரை கோவை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தியா முழுவதும் ரயில் போக்குவரத்தை நம்பி ஏராளமான பொதுமக்கள் மற்றும் பயணிகள் உள்ளனர். தொலை தூர பயணத்துக்கும், மிக குறைந்த செலவில் சென்று வருவதற்கும் பொதுமக்கள் முதலில் தேர்வு செய்வது ரயில் போக்குவரத்தைதான். பயணிகள் போக்குவரத்துக்கு மட்டுமின்றி சரக்குப் போக்குவரத்துக்கும் ரயில் பயன்பட்டு வருகிறது.

train woman


ரயில் போக்குவரத்தில் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் பொறுப்பற்ற தன்மையுடன் அநாகரீகமாக சிலர் நடந்து கொள்வதால் அசம்பாவிதங்களும் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், திருவனந்தபுரத்தில் இருந்து பாலக்காடு - சாலிமர் செல்லும் ரயிலில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு ஆண் ஒருவர் திடீரென முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அந்த நபரை பயணிகள் பலரும் இணைந்து சரமாரியாக தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அந்த நபரை கோவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் தனது குடும்பத்தினருடன் திருவனந்தபுரத்திற்குச் சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்து நேற்று காலை பாலக்காடு - சாலிமர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். படுக்கை வசதி கொண்ட எஸ் 14 பெட்டியில் பெற்றோருடன் இரவில் அந்த இளம்பெண் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது, அதே பெட்டியில் பயணம் செய்த 42 வயது பயணி ஒருவர் ஓடும் ரயிலில் திடீரென அதிகாலை 1 மணியளவில் அந்தப் பெண்ணுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அப்பெண் அலறியடித்து சப்தம் போட்டுள்ளார். பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு பெற்றோர் மற்றும் மற்ற பயணிகளும் எழுந்துள்ளனர்.

அந்தப் பெண் நடந்த சம்பவத்தைக் கூறியதையடுத்து, பயணிகள் அனைவரும் முத்தம் கொடுத்த பயணியை சரமாரியாக அடித்து உதைத்தனர். அப்போது, அந்த நபர் குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அந்த ரயில் இன்று காலை கோவை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. ரயில் வந்து சேர்ந்ததும் கோவை ரயில் நிலைய போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.

அப்பெண் அளித்த புகாரின்பேரில் அந்த நபரை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த நபரின் பெயர் அருண் மாலிக் (வயது 42) என்பதும், கேரளா மாநிலம், எர்ணாகுளம் பகுதியில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அந்த நபர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக அந்த ரயிலில் பயணம் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

அந்த நபர் குடிபோதையில் இருந்த நிலையில், இளம்பெண்ணை பார்த்ததும் முத்தம் கொடுத்தது தெரியவந்ததையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் சக பயணிகள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+