அதிர்ந்த கோவை.. பைக்கில் சென்ற பெண்களிடம் நகை பறித்த போலீஸ் ஏட்டு.. அதிரடி காட்டிய காவல்துறை
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி சாய்பாபா காலனியை சேர்ந்தவரான தர்மசாஸ்தா என்பவரின் மனைவி மகேஸ்வரி (வயது 58). இவர் கடந்த மாதம் 27 ஆம் தேதி பைக்கில் பொள்ளாச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஜோதி நகர் பகுதியில் வந்த போது, அந்த வழியாக பைக்கில் வந்த நபர் ஒருவர் மகேஸ்வரி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.

அதேபோல கோலார்பட்டி சுங்கத்தை சேர்ந்த அம்சவேணி என்பவரிடம் நகை பறிப்பு சம்பவம் நடைபெற்றது. அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவங்கள் குறித்தும் பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இரு பெண்களிடமும் நகை பறிப்பில் ஈடுபட்டது போலீஸ் என்பது தெரியவந்தது. பொள்ளாச்சியை அடுத்து மாக்கினாம்பட்டியை சேர்ந்த சபரி கிரி என்பவர் செட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வருவதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து கடந்த 2 ஆம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை சிறையில் அடைத்தனர். பெண்களிடம் நகை பறித்த வழக்கில் கைதான அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, போலீஸ் ஏட்டு சபரிகிரியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட போலீஸ் உத்தரவிட்டுள்ளார்.
-
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications