சிறார் ஆபாச வீடியோ.. பேஸ்புக்கில் பதிவு செய்த அஸ்ஸாம் மாநில இளைஞர் பொள்ளாச்சியில் கைது
Recommended Video
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சிறார் ஆபாச படத்தை பேஸ்புக்கில் பதிவு செய்ததாக வடமாநில இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
குழந்தைகளின் நலன் கருதி சிறார் ஆபாச படம் தொடர்பாக தமிழக அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ரெண்டா பாசுமாடரி பொள்ளாச்சியில் உள்ள ஒரு டைல்ஸ் கடையில் பணியாற்றி வந்தார்.

இவர் தனது பேஸ்புக்கில் சிறார் ஆபாச வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாசுமாடரியை போலீஸார் கைது செய்தனர். மேலும் அந்த இளைஞரின் செல்போனில் குழந்தைகள் ஆபாச படங்கள் அதிகமாக இருந்ததாகவும் அந்த ஆபாச படங்கள் ஃபேஸ்புக், மெசேஞ்சர் மூலமாக நண்பர்களுக்கு அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் குற்றவாளியின் சமூக வலைதள கணக்கை முடக்கியுள்ளனர். செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அனைத்து மகளிர் நிலையம் போலீசார் போக்சோவின் கீழ் வழக்கு பதியப்பட்டு சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை மாவட்ட போலீசார் தொடர்ந்து சமூக வலைதளங்கள் மற்றும் சிறார் ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் பட்டியல், விவரங்கள் சேகரித்து வருவதாகவும் விரைவில் சட்டப்படி கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சியில் ஒருவர் சிறார்களின் ஆபாச படத்தை பரப்பியதாக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications