நைட்டு நேரத்தில் என்ன சாப்பாடு? ஹோட்டலுக்குள் புகுந்து வெளுத்தெடுத்த போலீஸ்.. தீயாய் பரவும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

கோவை : கோவை காந்திபுரம் பகுதியில் இரவு நேரத்தை கடந்து செயல்பட்டு வந்த ஹோட்டலுக்குள் நுழைந்து அங்கிருந்த வாடிக்கையாளர் உட்பட அனைவரையும் லத்தியால் கடுமையாக தாக்கும் காவல்துறையினர் குறித்த வீடியோ மீண்டும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Recommended Video

    இரவு நேரத்தை கடந்து செயல்பட்ட உணவகம்.. உள்ளே புகுந்து லத்தியால் அடித்த காவல்துறையினர் - வீடியோ

    தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக பொதுமக்களிடம் போலீசார் அத்துமீறும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    குறிப்பாக இரவு நேரங்களில் காவல் பணிகளில் ஈடுபடும் போலீசார் வாகன ஓட்டிகளிடமும், இரவு நேர உணவகங்களிலும் மிகக் கடுமையாக நடந்து கொள்வதும், இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாவதும் தொடர் கதையாகி வருகிறது.

    லத்தியால் தாக்குதல்

    லத்தியால் தாக்குதல்

    கோவை காந்திபுரம் பகுதியில் இரவு நேரத்தை கடந்து செயல்பட்டு வந்த ஹோட்டலுக்குள் நுழைந்து அங்கிருந்த வாடிக்கையாளர் உட்பட அனைவரையும் லத்தியால் கடுமையாக தாக்கும் காவல்துறையினர் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இக்காட்சியில் நேரத்தை கடந்து செயல்பட்டு வந்த ஹோட்டலினுள் நுழையும் எஸ்ஐ ஒருவர் அங்கிருந்த வாடிக்கையாளர்களில் ஆண்களை மட்டும் லத்தியால் கடுமையாக தாக்கியுள்ளார்.அதே நேரத்தில் பெண் வாடிக்கையாளர்களை அடிக்கவில்லை.

    கோவை உணவகம்

    கோவை உணவகம்

    அதில் ஆண் வாடிக்கையாளர் ஒருவரை எஸ்ஐ லத்தியால் தாக்கும் பொழுது எதிர்பாராத விதமாக அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த பெண்ணின் தலையில் லத்தி பட்டு விடுகிறது.இதனால் தலையை பிடித்து கொண்டு அதே நாற்காலியிலேயே அமரும் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வது போல் அந்த சிசிடிவி காட்சிகள் உள்ளன. நள்ளிரவு நேரத்தை தாண்டியும் கடை நடத்தினால் கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கலாம்.

    நடவடிக்கை வேண்டும்

    நடவடிக்கை வேண்டும்

    அதனை விடுத்து இவ்வாறு லத்தியால் தாக்குவது மனித உரிமையினை மீறும் செயல்.இதனால் உணவகத்திற்குள் நுழைந்து கொடூரமாக தாக்கும் இந்த காவல் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    வைரலாகும் சிசிடிவி

    வைரலாகும் சிசிடிவி

    கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட எஸ்ஐ தற்போது கோவை சைபர் க்ரைம் பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+