ஆயிரம் ரூபாய் லஞ்சத்தால்.. மொத்தமும் போச்சு.. கோவை ஏட்டுக்கு பாஸ்போர்ட்டால் வந்த வேட்டு
கோவை: கோவை மாவட்டம், செட்டிபாளையம் காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் விசாரணைக்காக 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய காவலர் ரமேஷ் என்பவரை கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தமிழகத்தில் ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் பெறுவது முதல் முதியோர் உதவித் தொகை, விதவையர் உதவித் தொகை விடுவிப்பது வரை லஞ்சம் என்பது அனைத்து துறைகளிலும் கரைபுரண்டு ஓடுகிறது. எண்ணற்ற நேர்மையான மனிதர்களுக்கிடையே சில கறைபடிந்த மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

சான்றிதழ்கள் பெற, உதவித் தொகை பெற என அனைத்திற்கும் லஞ்சம் வாங்கப்படுகிறது. பத்திரப் பதிவு, லைசென்ஸ் பெறுவது, பாஸ்போர்ட் விண்ணப்ப பரிசீலனைக்கு லஞ்சம் பெறும் பிரச்சனைகள் எல்லாம் காலம் காலமாக உள்ளது. லஞ்சம் வாங்கும் நபர்கள் பலர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு வரும் நிலையிலும் கூட, லஞ்சம் என்பது ஒழிந்த பாடில்லை.
இந்நிலையில், கோவை மாவட்டம், செட்டிபாளையம் காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் விசாரணைக்காக 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய காவலர் ரமேஷ் என்பவரை கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் பாஸ்போட்டிற்காக விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், காவல் துறை விசாரணைக்காக விண்ணப்பம் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த விண்ணப்பத்தை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ் என்பவர் விசாரணை செய்துள்ளார்.
கிருஷ்ணமூர்த்தியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பரிசீலனை செய்வதற்காக அந்த காவலர் 1000 ரூபாய் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, கிருஷ்ணமூர்த்தி லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணையை முடுக்கினர். கிருஷ்ணமூர்த்தியிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், இன்று கிருஷ்ணமூர்த்தி செட்டிபாளையம் காவல் நிலையத்திற்குச் சென்று 1,000 ரூபாய் லஞ்ச பணத்தை காவலர் ரமேஷிடம் கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ரமேஷை கையும் களவுமாக கைது செய்தனர். ரசாயனம் தடவிய பணத்தை ரமேஷிடம் இருந்து பறிமுதல் செய்தனர். செட்டிபாளையம் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
அடுத்தடுத்து ஆப்பு வைத்த மோடி அரசு! கூனிக்குறுகுது கோவை! புண்படுத்திகிட்டே இருக்கீங்களே! என்னாச்சு? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications