கோவையில் ஆவணங்கள் சரியாக இருந்தும் அபராதம் விதித்த போலீஸ்.. ஆட்டோ டிரைவர்கள் கலெக்டரிடம் புகார்
கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் திங்கள்கிழமையான நேற்று நடந்தது.இந்த கூட்டம் மாவட் ஆட்சி தலைவர் பவன்குமார்தலைமையில் நடந்தது. அப்போது வாகனத்தின் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தும் தவறாக அபராதம் விதிக்கப்பட்டது. எனவே அபராதத்தை ரத்து செய்து, தவறாக அபராதம் விதித்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்தனர்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை கூட்டத்துக்கு கலெக்டர் பவன்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

நேற்றைய கூட்டத்தில். நேதாஜி மக்கள் இயக்க தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் அளித்த மனுவில், கடந்த 16-ந் தேதி மதியம் 2.30 மணியளவில் ஆட்டோ டிரைவர் அப்பாஸ் என்பவர் கோவை ரெயில்நிலையம் முன்புறம் பயணிகளை ஏற்றிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் வாகனத்தில் ஆவணங்கள் ஏதும் சரியாக இல்லை என்று கூறி ஆன்லைன் மூலமாக ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தார்.
வாகனத்தின் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தும் தவறாக அபராதம் விதிக்கப்பட்டது. எனவே அபராதத்தை ரத்து செய்து, தவறாக அபராதம் விதித்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்கள்.
அதேபோல் கோவை ஆர்.எஸ்.புரம் கண்ணுசாமி ரோட்டை சேர்ந்த ராமசுப்பிரமணியன் (வயது 83) என்பவர் ஆம்புலன்சில் ஸ்ட்ரெக்சரில் வந்து மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், நான் கோவை விளாங்குறிச்சியில் 4 ஏக்கர் நிலங்களை 2018-ம் ஆண்டு கிரையம் செய்தேன். அப்போது காந்திபுரம் பத்திர பதிவு அலுவலகத்தில் பத்திரங்களை நிலுவை பட்டியலில் சேர்த்தனர்.
நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தேன். அதில் பத்திரங்களை விடுவிக்க கோர்ட்டு உத்தரவு வழங்கியது. இதையடுத்து வில்லங்க சான்றில் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது பட்டா மாறுதல் செய்ய முடியவில்லை. எனக்கு பட்டா மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications