இந்து மதத்திற்கு மாறிய இளம்பெண்..மாமனரை தூக்க வாட்ஸ் ஆப்பில் பக்கா ஸ்கெட்ச்..வசமாய் சிக்கிய 5 பேர்.!
கோவை : கோவையில் மதம் மாறி திருமணம் செய்து கொண்ட பெண்ணின் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய வாட்ஸ் ஆப்பில் திட்டம் தீட்டிய 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவரது மகன் அருண்குமார் ஹைதராபாத்தில் உள்ள தொழில்னுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கொரோன பேரிடர் காரணமாக அருண்குமார் கடந்த 7 மாதங்களாக சொந்த ஊரிலிருந்து பணியாற்றி வருகிறார்.

இளம்பெண்ணுடன் காதல்
அருண்குமார் ஹைதராபாத்தில் பணியாற்றி போது, அங்கு தங்கியிருந்த திருவாரூரை சேர்ந்த சஹானா என்பவருடன் காதல் ஏற்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் இருவரும், அருண் வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு கோவையில் வசித்து வருகின்றனர்.

விருப்பத்துடன் மதமாற்றம்
திருமணத்திற்கு பிறகு சஹானா இந்து மதப்படி மாறிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சஹானாவின் பெற்றோர், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள், அருணை மதம் மாறும்படி வலியுறுத்தி வந்துள்ளனர். இதற்கு குமரேசன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சஹானாவின் உறவினர்கள் வைத்துள்ள வாட்ஸ் ஆப் குழுவில் இது தொடர்பாக விவாதித்து வந்துள்ளனர்.

கொலை திட்டம்
அப்போது அவரது உறவினர்கள், குமரேசனை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ய திட்டம் தீட்டியதோடு, இது தொடர்பாக கல்கத்தாவை சேர்ந்த ஒரு நபரிடம் துப்பாக்கி வாங்க தொலைபேசியில் பேசியுள்ளனர். இந்த தகவல் அறிந்த தேசிய புலனாய்வு முகமை, இது தொடர்பாக கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், ஈரோடை சேர்ந்த முகமதி அலி ஜின்னா, திருச்சியை சேர்ந்த இம்ரான்கான், சதாம் உசேன், சென்னையை சேர்ந்த பக்ருதீன் மற்றும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த ராம்வீர் அஜய் ஆகிய 5 பேரை கைது செய்தனர்

வழக்கு பதிவு
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவினாசி கிளைச்சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும் துப்பாக்கி விற்பனையாளர்களுடன் இவர்களுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டுசதி, சாதி, மத, இனம் தொடர்பாக விரோத உணர்ச்சியை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்னர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications