டிஐஜி தற்கொலை விவகாரம்: “ஆதாரம்”? 8 பேர் விசாரணைக்கு ஆஜராக சம்மன்.. அடுத்தகட்ட ஆக்ஷனில் போலீசார்!
கோவை: டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை விவகாரம் தொடர்பாக 8 பேர் வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். விஜயகுமார் தற்கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் உட்பட 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில், பாதுகாவலரின் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் காவல்துறையினர், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலைச் சம்பவம் தொடர்பாக கோவை ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உதவி ஆணையாளர் கரிகாலன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், விஜயகுமார் வீட்டில் இருந்தவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். தொடர்ந்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளைப் பதிவு செய்திருந்தனர். விஜயகுமாரின் மகள் மருத்துவம் படிக்க தயார் செய்து வந்ததாகவும் நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததன் காரணமாக விஜயகுமார் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் சிலர் பதிவிட்டிருந்தனர்.
இந்நிலையில், டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்கள், யூடியூப் சேனல்களில் கருத்து கூறியவர்கள், டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து சமூக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தவர்கள் உள்ளிட்டோருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக கருத்து தெரிவித்தவர்கள் 8 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) கோவை ராமநாதபுரம் காவல் நிலைய போலீசார் முன்பு நேரில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
அப்போது அவர்களிடம் டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக நீங்கள் தெரிவித்த கருத்துக்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது, யார் அதனை உங்களுக்கு சொன்னது என்பது உட்பட பல்வேறு கேள்விகளை கேட்டு அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
சேலம் மக்களுக்கு ஜாக்பாட்.. 210 ஏக்கர் நிலம் ரெடி பண்ணுங்க..!கோயம்புத்தூர் உடன் நேருக்குநேர் போட்டி? -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்












Click it and Unblock the Notifications