பொள்ளாச்சியில் கிளம்பிய ராட்சத பலூன்.. கேரளா தோட்டத்தில் நடந்த திக் திக் சம்பவம்
கோவை: பொள்ளாச்சியில் சென்னையை போல அங்கு நடைபெறும் சர்வதேச பலூன் திருவிழாவும் மிகவும் பிரபலம். ஆனால் இந்தாண்டு பலூன் திருவிழா தொடங்கிய முதல் நாளிலேயே அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குழந்தைகளுடன் பயணித்த ஒரு ராட்சத பலூன் கேரளாவில் உள்ள விவசாய நிலத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது அரசு மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து பலூன் திருவிழா நடக்கும். இதில் பல்வேறு நாடுகளில் இருந்து வெப்ப காற்று பலூன்களுடன் கலந்து கொள்வார்கள். மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த திருவிழாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

ஒவ்வொரு முறையும் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கேரளாவில் இருந்து பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளாக கலந்து கொள்வார்கள். இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து பத்தாம் ஆண்டு சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா பொள்ளாச்சியில் நேற்று தொடங்கியது. கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆச்சிப்பட்டி பகுதியில் பலூன் திருவிழா நடைபெறுகிறது.
இதில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, தாய்லாந்து உள்ளிட்ட எட்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். அதேபோல உள்நாட்டு பலூன்களும் கலந்து கொண்டுள்ளன. நேற்று தொடங்கி வருகிற 16 ஆம் தேதி வரை இந்த பலூன் திருவிழா நடைபெறவுள்ளது. முதல் நாளான நேற்று முக்கிய பிரமுகர்கள் மற்றும் விளம்பர தாரர்களை பிரம்மாண்ட பலூன்களில் பறக்கவிட்டனர்.
பொள்ளாச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவுக்கு பறந்த பலூன் திடீரென கட்டுபாட்டை இழந்தது. பிறகு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கன்னிமாரி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தரையிறங்கியது. அதில் பயணித்தவர்கள் லேசான காயங்களுடன் பத்திரமாக தரையிறங்கினர். வயல் வெளியில் இறங்கியதால் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை.
பொள்ளாச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவுக்கு பறந்த பலூன் திடீரென கட்டுபாட்டை இழந்தது. பிறகு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கன்னிமாரி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தரையிறங்கியது. அதில் பயணித்தவர்கள் லேசான காயங்களுடன் பத்திரமாக தரையிரங்கினர். வயல் வெளியில் இறங்கியதால் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை.
அந்த பலூனில் ஒரு காவல்துறை அதிகாரி, இரண்டு பைலட்கள், இரண்டு குழந்தைகளும் இருந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு எதுவுமாகவில்லை. உள்ளூர் வாசிகள் அவர்களை மீட்டு தண்ணீர் கொடுத்தனர். பிறகு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு அந்த மக்கள் பொள்ளாச்சி அழைத்து வரப்பட்டனர். பலூன் திருவிழாவில் முதல் நாளில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கமளித்த பலூன் திருவிழா ஏற்பாட்டாளர்கள், எரிபொருள் குறைவாக இருந்த காரணத்தால் தான் பலூன் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டுள்ளன. அதனால் தான் பெரிய சேதம் ஏற்படவில்லை என்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications