Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இளம் வயது, திருமணம் ஆகல.." பொள்ளாச்சி வழக்கில் தண்டனையை குறைக்க குற்றவாளிகள் முன்வைத்த கோரிக்கைகள்

Subscribe to Oneindia Tamil

கோவை: ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிப்போட்ட வழக்கு பொள்ளாச்சி பாலியல் வழக்கு. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருமே குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கிடையே இளம் வயது மற்றும் திருமணம் ஆகவில்லை என்பதைக் காரணம் காட்டி குறைந்த தண்டனையை வழங்குமாறு குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019ம் ஆண்டு நாட்டையே உலுக்கும் அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அங்கு ஒரு கும்பல் இளம்பெண்களை ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டி வந்தது தெரிய வந்தது. இந்த கொடூரம் அப்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிப்போட்டது.

Pollachi Case Criminals Plead for lesser sentencing Leniency Citing Age

9 பேரும் குற்றவாளிகள்

இந்த விவகாரத்தில் சபரிராஜன் (வயது 30), வசந்தகுமார் (32), சதீஷ் (33), மணிவண்ணன் (30), திருநாவுக்கரசு (30), ஹேரேன் பால் (34), பாபு என்ற பைக் பாபு (38), அருளானந்தம் (38), அருண்குமார் (36) என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு கோவையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

கோவை மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கிற்காகத் தனி அறை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட யாருக்குமே இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. வழக்கு விசாரணை நடந்தபோது அவர்கள் சேலம் மத்தியச் சிறையிலேயே அடைக்கப்பட்டனர். வழக்கு விசாரணைகள் முழுமையாக முடிந்த நிலையில், நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

கோவை நீதிமன்றம்

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருமே குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கு மிக மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்துவிட்டு ஒருவராலும் தப்ப முடியாது என்பதை மீண்டும் உறுதி செய்வதாகவே இருக்கிறது. மதியம் 12 மணியளவில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை நீதிபதி அறிவித்தார். 9 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை, ஒரே பெண்ணுக்கு மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை தருவது என முக்கிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 9 பேருமே குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த பிறகு, அவர்கள் வழக்கறிஞர் சார்பில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. குறைந்தபட்ச தண்டனையை வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

கோரிக்கை

அதாவது கைது செய்யப்பட்ட அனைவருமே இளம் வயதினர்.. திருமணமாகாதவர்கள்.. அவர்களுக்கு எதிர்காலம் இருக்கிறது.. மேலும், வயதான பெற்றோர்கள் இருப்பதால் அவர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட காரணங்களைச் சொல்லி தண்டனையைக் குறைந்தபட்ச தண்டனை வழங்கக் குற்றவாளிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவருமே 28-35 வயதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு தரப்பு வழக்கறிஞர்

இருப்பினும், இந்த கோரிக்கைக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். அவர்கள் செய்த குற்றம் பெண்களுக்கு எதிரானது என்பதாலும் இது அரிதிலும் அரிதான வழக்கு என்பதால் அதிகபட்ச தண்டனை வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடப்பதைத் தடுக்கும் வகையில் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என்றும் குற்றவாளிகளின் கோரிக்கையைப் புறந்தள்ள வேண்டும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்றே 9 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+