பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. திருநாவுக்கரசுக்கு ஜாமீன் கோரிய தாயார்.. கோர்ட் டிஸ்மிஸ்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசுக்கு அவரது தாய் கோரிய ஜாமீன் மனுவை விசாரித்த பொள்ளாச்சி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
200 பெண்களின் வாழ்க்கையை சூறையாடிய 20 பேர் கொண்ட கும்பலை சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றும்படி அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் திருநாவுக்கரசு. இவர்தான் இவரது நண்பர்களின் காதல் வலையில் விழும் அப்பாவி பெண்களை மனமுறுக பேசி தனிமையான இடத்துக்கு வரவழைப்பார் என கூறப்படுகிறது.
அப்பெண்களை வீடியோ எடுப்பது, பலாத்காரத்துக்கு ஒத்துழைக்காவிட்டால் துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இவரை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அவரது தாய் செல்வி பொள்ளாச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் திருநாவுக்கரசுதான் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி என கூறப்படுகிறது. அவரிடம் இருந்து ஒப்புதல் வாக்குமூலமும் பெறப்பட்டுவிட்டது.
அவரிடம் இருந்த இரு ஹைபோன்கள் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதுகுறித்த அறிக்கை வர வேண்டும். எனவே திருநாவுக்கரசுக்கு ஜாமீன் தர இயலாது என்று கூறிய நீதிபதிகள் செல்வியின் ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications