பொள்ளாச்சி கொடூரம்… பார் நாகராஜனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன்
கோவை: பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் பார் நாகராஜனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்த நிலையில், அவர்கள் குண்டர் சட்டத்தில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், அதன் அடிப்படையில் பலருக்கு விசாரணைக்காக சம்மன் அனுப்பி வருகின்றனர்.
நக்கீரன் கோபால், மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், வரும் 28-ம் தேதி ஆஜராகும் படி, பார் நாகராஜன், திமுக கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் தென்றல் செல்வராஜின் மகன் தென்றல் மணிமாறன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக, கட்சி தலைவர்களுடன் மட்டுமே தனக்கு பழக்கம் உள்ளதாக கூறிய அவர், அரசியலில் இருப்பதால் திருநாவுக்கரசு, வசந்தகுமார் உள்ளிட்டோர் தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக விளக்கமளித்தார்.
எல்லோருமே தன்னை தவறாகவே சித்தரிப்பதாகவும், சில வாரங்களுக்கு முன்பு வெளியான வீடியோவில் இருப்பது சதீஷ் என்ற நபர் என்றும் இதனை நிரூபிக்க, தான் தயார் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications