பொள்ளாச்சி உதவி கலெக்டர் என கணவனுக்கு அல்வா தந்த பெண் நியாபகம் இருக்கா.. இப்ப என்னாச்சு தெரியுமா?
நாமக்கல்: நாமக்கல்லைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர் கோவையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு நாமக்கல்லைச் திருமணத்திற்கு பெண் தன்வர்த்தினி என்ற பெண்ணை பார்த்துள்ளனர். அவர் பொள்ளாச்சியில் உதவி கலெக்டராக பணிபுரிந்து வருவதாக பொய் சொல்லி திருமணம் செய்தாராம். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட போலி பெண் உதவி கலெக்டரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்யலாம் என்று சொல்வார்கள்.. ஒரே ஒரு பொய் சொல்லி திருமணம் செய்த பெண்..அந்த பொய்யால் மொத்த அரசாங்கத்தையும் ஆடிப்போக வைத்துள்ளார். அது சாதாரண பொய் அல்ல. தான் உதவி கலெக்டர் என்று பொய் சொல்லியிருக்கிறார். அது அவரை சிறையில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் பெரிய மணலியை சேர்ந்த 29 வயதாகும் நவீன்குமார் என்பவர் கோவையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி நாமக்கல் ராமாபுரம் புதூரை சேர்ந்த தன்வர்த்தினியுடன் கல்யாணம் நடந்திருக்கிறது.
திருமணத்திற்கு பெண் பார்த்தபோது தன்வர்த்தினி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உதவி கலெக்டராக பணிபுரிந்து வருவதாக நவீன்குமாரின் பெற்றோரிடம் சொன்னாராம்- போலி உதவி கலெக்டர் தன்வர்த்தினி நுனி நாக்கில் ஆங்கிலம் பேசியதுடன், தோற்றம் மற்றும் செயல்பாடுகளால் அவர் போலி உதவி கலெக்டராக இருக்க வாய்ப்பு உள்ளது என யோசிக்கவே இல்லை.
கோவை வங்கி அதிகாரி நவீன்குமாரின் குடும்பம் எந்த விசாரணையும் செய்யாமல் உண்மை என்று நம்பிவிட்டது. திருமணத்திற்கே பிறகே சில மாதங்கள் கழித்தே தன்வர்த்தினி உதவி கலெக்டர் இல்லை என்பது நவீன்குமாரின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து நவீன்குமார் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி உதவி கலெக்டர் தன்வர்த்தினியை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் நாமக்கல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு 1-ல் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.
போலி உதவி கலெக்டர் தன்வர்த்தினியின் பொள்ளாச்சி வீட்டிற்கு சென்று சோதனை செய்த போலீசார் அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் லேப்டாப் ஒன்றை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் இருந்து தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி தன்வர்த்தினி வக்கீல்கள் மூலம் நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார். நேற்று விசாரணை முடிவில், தன்வர்த்தினியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications