கோவையில் இன்று எங்கெல்லாம் மின்தடை?.. உங்க ஏரியா இருக்கானு பாருங்க.. முழு விவரம்
கோவை: கோவையில் மின் வாரியம் சார்பில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இந்தப் பராமரிப்புப் பணியின் காரணமாக கோவையில் ராமநாதபுரம், குறிச்சி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளதாக மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு முறையாக மின்சாரம் வழங்கும் வகையில் மாதம்தோறும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது வழக்கம். அந்த சமயங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில், கோவை மாவட்டத்தில் சில இடங்களில் மின் வாரியம் சார்பில் பராமரிப்புப் பணிகள் இன்று (அக்டோபர் 17 ஆம் தேதி) மேற்கொள்ளப்படவுள்ளதால் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: கோவையில் அக்டோபர் 17 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை ஏற்படுகிறது. மாலை 5 மணிக்கு பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
கோவை பீளமேடு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இன்டஸ்ட் ரியல் எஸ்டேட், போலீஸ் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாராம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி. ராவ் நகர், காமதேனு நகர்.
நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே-அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதூர், எல்லை தோட்டம், வ.உ.சி. காலனி, பி.கே.டி. நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், பங்கஜாமில், தாமு நகர், பாலசுப்ரமணிய நகர், பாலகுருகார்டன், சவுரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம்.
ராஜீவ் காந்தி நகர், பார்சன் அபார்ட்மெண்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி ரோடு, நஞ்சுண் டாபுரம் ரோடு, திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை கோவை நகர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேபோல, குனியமுத்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சுந்தராபுரம், போத்தனூர், ஈச்சனாரி, குறிச்சி, ஹவுசிங்யூனிட், எல்.ஐ.சி. காலனி, மலுமிச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை குனியமுத்தூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications