1 முறை அல்ல 2வது முறையும் போலீசுக்கு டிமிக்கி.. கோவை சிறைவாசலில் கைதி எஸ்கேப்.. சிறைத் துறை விளக்கம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மத்திய சிறையில் 400க்கும் மேற்பட்ட காவலர்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு கைதி ஒருவர் தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே கர்நாடக போலீசாரிடம் இருந்து ஒருமுறை தப்பிய கைதி ராகவன், தற்போது இரண்டாவது முறையாகவும் போலீசாரின் பிடியிலிருந்து சிறை வாசலிலேயே தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து சிறைத்துறை தரப்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டி மாவட்ட சிறை உள்ளது. அக்டோபர் 26 ஆம் தேதி சில கைதிகள் வலிப்பு நோய் வந்ததாக நடித்தனர். பிறகு 4 காவலர்களை தாக்கிவிட்ட 17 விசாரணை கைதிகள் தப்பினர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். சிறையில் உள்ள கைதிகளை கூட பாதுகாக்க முடியாத அவல நிலையில் காவல்துறையினர் இருப்பதாக விமர்சித்தனர்.

prisoner-escapes-for-the-second-time-near-coimbatore-central-jail

தப்பியோடிய கோவை கைதி

தனிப்படை மூலம் காவல்துறையினர் 15 பேரை 2 நாட்களில் கைது செய்தனர். இரண்டு பேர் சரணடைந்தனர். இந்த விவகாரத்தில் பொறுப்பு கண்காணிப்பாளர் உள்ளிட்ட 10 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அந்த அதிர்ச்சி ஓய்வதற்குள் அடுத்த அதிர்ச்சி நடந்துள்ளது. கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் ராகவன் (வயது 25). இவர் மீது தமிழகம், கர்நாடகா மாநிலங்களில் வழிப்பறி, திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

அவரை அன்னூர் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அன்னூர் காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று இரவு கோவை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டார். சிறை வாளாகத்தில் இருந்து கைதி ராகவன் திடீரென தப்பி ஓடினார். ராகவனை பந்தயசாலை போலீசார் தேடி வருகின்றனர். தேனி தேக்கம்பட்டி கூட கிளை சிலை. காவலர்கள் குறைந்த அளவிலேயே பணியில் இருந்தனர்.

தப்பித்தது எப்படி

ஆனால் ராகவன் தப்பித்துள்ளது கோவை மத்திய சிறையாகும். 165 ஏக்கரில் உள்ள சிறையில் சுமார் 300 கைதிகளை அடைக்க முடியும். 400க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய சிறையில் இரண்டடுக்கு பாதுகாப்பு உள்ளது. முதல்கட்ட தகவல்படி ராகவன் முதல் நுழைவு வாயிலை கடந்து, இரண்டாவது நுழைவுக்கு செல்லும்போது தப்பித்துள்ளார். அருகிலேயே காந்திபுரம் பேருந்து நிலையம் உள்ளது. அவர் பேருந்தில் வெளியூர் சென்றிருப்பாரா என்கிற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

விஜய் எச்சரிக்கையும் மீறி

முன்னதாக, "சிறைகளில் பாதுகாப்பு, கண்காணிப்பில் எந்த தொய்வும் ஏற்பட கூடாது சிறை அலுவலர்கள் பொறுப்புகளை முழு கவனத்துடன் செய்ய வேண்டும். பணியில் மெத்தனமாகவோ, கவனக்குறைவாகவோ செயல்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று முதலமைச்சர் விஜய் எச்சரித்திருந்தார். அதையும் மீறி மற்றொரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறைத்துறை விளக்கம்

இதுகுறித்து சிறைத் துறையினர் கூறுகையில், சிறைக்குள் கொண்டு செல்லும் முன்பே கைதி தப்பி சென்றார். போலீஸ் கஸ்டடியில் இருந்தபோது நடந்தது. கடந்த இரண்டரை மாதத்துக்கு முன்பு கர்நாடக போலீசார் ராகவனை கோவைக்கு ஒரு வழக்குக்காக அழைத்து வந்தனர். அப்போது, அன்னூர் அடுத்த கணுவ கரையில் இயற்கை உபாதை என போலீஸ் வேனிலிருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கர்நாடக போலீஸ் எஸ்ஐ கொடுத்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கில் நேற்று இரவு இவர் அன்னூர் போலீசாரிடம் பிடிபட்டார். அன்னூர் போலீஸ் எஸ்ஐ முத்தலீப் மற்றும் 3 போலீசார் அவரை நள்ளிரவு ஒரு மணிக்கு மத்திய சிறையில் அடைக்கச் சென்றபோது காரில் இருந்து சிறை வாசலுக்கு நடந்து செல்லும் வழியில் தப்பி ஓடியுள்ளார் என்று கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+