தாயகம் திரும்பிய தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்! கோவையில் மலையகம் அமைப்பு மாநாடு
கோவை: தாயகம் திரும்பிய தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன என்பது பற்றி பேசுவதற்காக, மலையகம் அமைப்பு சார்பில் கோவையில் மாநாடு நடத்தப்பட்டது.
இதில் ஆ.ராசா எம்.பி., கலாநிதி வீராசாமி எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் உள்ளிட்ட இன்னும் பலர் கலந்துகொண்டனர்.

இதனிடையே மலையகம் 200 -பன்னாட்டு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;
*சிறிமா - சாஸ்திரி உடன்படிக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு இந்தியக் குடியுரிமை கோருவோருக்கு இந்திய ஒன்றிய அரசு இந்தியக் குடியுரிமையை வழங்கவேண்டும்
*தாயகம் திரும்பியோரது வாழ்நிலை அறிய தமிழ்நாடு அரசு ஆய்வு நடத்திடவேண்டும்
*அரசு தேயிலைத் தோட்டக் கழகத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வாதாரம் உறுதிசெய்யப்படவேண்டும். தாயகம் திரும்பியோரில் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளோரின் நிலங்களுக்கும் வீட்டு மனைகளுக்கும் பட்டா வழங்கவேண்டும்
*புனர்வாழ்வு திட்டத்தின்கீழ் 1984க்கு முன்பாக தாயகம் திரும்பியோருக்கு அரசு வழங்கிய வீட்டுக் கடனை இரத்து செய்ததுபோல் 1984க்கு பிறகு வாங்கியவர்களின் வீட்டுக்கடனையும் இரத்துசெய்யவேண்டும்
*மலையகத் தமிழர்கள் ஒரு தனித்த மக்கள் சமூகம் என்று இலங்கை அரசு சட்டவகையில் அங்கீகரிக்கவேண்டும். கடந்த இரு நூறாண்டுகளில் ஆங்கிலேய அரசால் பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்துவதற்காக இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் அனைவரையும் மலையகத் தமிழர்களாக வரையறுக்க வேண்டும்.
*இலங்கையின் ஒற்றையாட்சி அரசமைப்பை மாற்றி, ஒரு கூட்டாட்சி ஏற்பாட்டின் மூலம் தம்மைத் தாமே நிர்வகித்துக் கொள்ளும் வகையில் மலையகத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.
*பெருந்தோட்ட பொருளாதார மேம்பாட்டை மையமாக கொண்டு மலையகத்தில் மலையகப் பல்கலைக்கழகம் அமைக்கப்படவேண்டும்
*மலையக மக்களுக்கு காணி உரிமையும் வீட்டுரிமையும் வழங்குவதற்கு இலங்கை அரசு முன்வர வேண்டும்.
*இலங்கையில் உள்ள ஏனைய இனச் சமூகங்களைவிட அனைத்துவகையிலும் பின் தங்கியுள்ள மலையக மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்த பொருளாதார உதவிகளை வழங்குவதற்கு இலங்கை, இந்திய, ஆங்கிலேய அரசுகள் முன்வர வேண்டும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications