கோவையில் வீட்டில் வைத்து விபச்சாரம்.. சிக்க வைத்த ஆட்டோ டிரைவர்.. கையும் களவுமாக சிக்கிய அழகிகள்
கோவை: ஹோட்டல்களில், லாட்ஜ்களில் விபச்சாரம் செய்தால் போலீஸ் பிடித்து விடுகிறார்கள் என்பதால் இப்போது நூதனமான முறையில் விபச்சாரம் செய்கிறார்கள். வீடுகளை வாடகைக்கு பிடித்து விபச்சாரம் செய்வது அதிகரித்துள்ளது. கோவையில் வீட்டில் அழகிகளை வைத்து விபச்சாரம் செய்த மூன்று புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபச்சாரம் இப்போது நூதனமான முறையில் நடக்கிறது. அடுக்குமாடி குடியிருப்புகள், சொகுசு விடுதிகளில் அவ்வப்போது நடப்பதும், அதை கேள்விப்பட்டு போலீசார் கைது செய்வதும் நடக்கிறது. இதேபோல் மசாஜ் என்ற பெயரிலும், ஸ்பா என்ற பெயரிலும் விபச்சாரம் நடக்கிறது. இதுகுறித்து தகவல் வெளியான உடன் போலீசார் தேடி சென்று கைது செய்கிறார்கள். விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை காப்பகத்தில் ஒப்படைக்கும் போலீசார், புரோக்கர்களை சிறையில் அடைக்கிறார்கள்.

இந்நிலையில் போலீசாரை ஏமாற்றுவதற்காக வீடுகளில் வைத்தும் இப்போது விபச்சாரம் நடக்கிறது. குடும்பமாக வந்து குடியேறி விபச்சாரம் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் அதையும் போலீசார் கண்டுபிடித்து புரோக்கர்களை கைது செய்கிறார்கள். அந்த வகையில் கோவை சின்னவேடம்பட்டி அருகே வீட்டில் விபசாரம் நடத்திய 3 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை சரவணம்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், கடந்த வியாழக்கிழமை அன்று சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் சின்னவேடம்பட்டி அன்னை பாத்திமா நகர் அருகே நின்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு மூன்று பேர் வந்திருக்கிறார்கள். நைசாக பேச்சுக் கொடுத்த 3பேரும், இங்குள்ள ஒரு வீட்டில் அழகான பெண்கள் உள்ளனர், நீங்கள் பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும், அவரை கத்தி முனையில் மிரட்டி ரூ.1,000-ஐ பறித்து சென்றுவிட்டார்களாம்.
இதுகுறித்து கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஆட்டோ டிரைவர் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார், அந்த பகுதிக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சின்னவேடம்பட்டியில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன் ஆட்டோ டிரைவரிடம் இருந்து பணத்தை பறித்தது புரோக்கர்கள் என்பதும் தெரியவந்தது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி(வயது 50), செல்வகுமார்(39), தேனி மாவட்டத்தை சேர்ந்த முருகன்(45) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சென்னை, பெங்களூரு மற்றும் தர்மபுரியை சேர்ந்த 3 அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
முன்னதாக கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு ஐந்தாவது விதியில் உள்ள அழகு நிலையத்தில் விபச்சாரம் நடப்பதாக காட்டூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அக்டோபர் 3ம் தேதி ஆய்வு நடத்தினர். அப்பொழுது அங்கு அழகிகளை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 27 வயதான ஜெயபிரகாஷ், 22 வயதான பாண்டித்துரை, 27 வயதான நவீன் குமார், ஆகிய மூன்று பேரை கைது செய்ததுடன் மூன்று அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
-
கோவை சிறுமி விவகாரம்! வாழறதுக்கே தகுதி இல்லாதவர்கள்! எம்.எஸ்.பாஸ்கர் கொந்தளிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications