கூன்விழுந்த முதுகு.. அடுப்பு மூட்டி, ஆவி பறக்க ஒரு ரூபாய்க்கு இட்லி சுட்டு போடும் கமலாத்தாள் பாட்டி
ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டிக்கு பாராட்டுக்கள் குவிகிறது
Recommended Video
கோவை: ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி விற்கும் பாட்டிக்கு தொடர்ந்து பாராட்டுக்களும், உதவிகளும் குவிந்து வருகின்றன.
இப்பவெல்லாம் ஒரு இட்லி குறைந்தது 5 ரூபாயாவது விற்கிறார்கள். இதுவே ஸ்டார் ஓட்டல்களில் 50 ரூபாய்க்கும் விற்கிறார்கள்.

ஆனால் யார் எப்படியாவது விற்று கொள்ளுங்கள், நான் இப்படித்தான் விற்பேன் என்கிறார் கோவை ஆலாந்துறையை அடுத்துள்ள வடிவேலாம்பாளையத்தை சேர்ந்த கமலாத்தாள் பாட்டி. வயது 85 ஆகிறது. ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கிறார்.
யாருமே உதவிக்கு இல்லாமல் தனி ஆளாகவே 30 வருஷமாக இந்த இட்லி கடையை நடத்துகிறார். அவரே இட்லி, சட்னி, சாம்பார் செய்கிறார். ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்றாராம். அதற்கு பிறகுதான் விலையைகூட்டி உள்ளார்.
சமைக்க கேஸ் அடுப்பு கிடையாது.. மாவு அரைக்க கிரைண்டர் கிடையாது.. சட்னி அரைக்க மிக்சி கிடையாது.. எல்லாமே அடுப்பும், ஆட்டுக்கல்லும்தான்! சுடச்சுட ஆவி பறக்க சுவையான இட்லி, சாம்பார் விடிகாலையிலேயே தயாராகிறது. இவரது இந்த கைப்பக்குவத்துக்கு மாணவ, மாணவிகள் முதல் ஆபீஸ் போகும் நபர்கள் வரை ரெகுலர் கஸ்டமர்கள். ஒருநாளைக்கு 200 பேர் சாப்பிட வருகிறார்களாம்.

இந்த பாட்டியின் வீடியோதான் இப்போது இணையத்தில் வைரலாகிறது. இதை பார்த்து, பலரும் உதவி செய்து வருகிறார்கள். பொதுமக்கள் முதல், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வரை இந்த பாட்டிக்கு உதவ தயார் என்று சொல்லி வாழ்த்தையும் பதிவிட்டு வருகின்றனர். மாவட்ட கலெக்டரும் ராசாமணி நேரில் கூப்பிட்டு வாழ்த்தும் தெரிவித்தார்.
பாட்டிக்கு இப்போது காஸ் அடுப்பு, கிரைண்டர் கிடைத்துவிட்டது. ஆனால் எப்படி அதை பயன்படுத்துவது என்று தெரியவில்லையாம். போக போக பழகிக்கிறேன் என்று சொல்கிறார் இந்த பொக்கை வாய் பாட்டி கமலாத்தாள்!
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications