மிரட்டும் கனமழை.. மலை ரயில் சேவை ரத்து.. மூடப்பட்ட நீலகிரி கோவை சுற்றுலா தலங்கள்
கோவை: தமிழ்நாட்டில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மலை ரயில் போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்கள் இன்று (22.10.25) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மையம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.

மலை ரயில் சேவை ரத்து
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழை முன்னெச்சரிக்கை காரணமாக 19 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், நீலகிரி சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை, மண் சரிவு காரணமாக ஏற்கனவே கடந்த 3 நாட்களாக மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து மழைபெய்து ரயில் பாதைகளில் பாறைகள் விழுந்துள்ளதால், நான்காவது நாளாக இன்றும் (22.10.205) மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீலகிரி கோவை சுற்றுலா தலங்கள்
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன் ஃபாரஸ்ட், 8th மைல் ட்ரீ பார்க், தொட்டபெட்டா, அவலாஞ்சி, கேர்ன் ஹில் ஆகிய சூழல் சுற்றுலா தலங்களில் இன்று (22.10.2025) ஒரு நாள் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து மூடப்படுவதாக வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டதாலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் கனமழையாலும் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இன்று (22.10.2025) புதன்கிழமை முதல் கோவைக் குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுகிறது என்று கோவை போளுவாம்பட்டி வனச்சரகர் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் கோவை, நீலகிரி சுற்றுலா பயணிகள் சோகமடைந்துள்ளனர்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து?












Click it and Unblock the Notifications