பொங்கல் பரிசாக தர வழங்கிய ரூ.1.22 லட்சம் பணத்துடன் எஸ்கேப் ஆன ரேஷன் கடை ஊழியர்.. போலீசார் வலைவீச்சு!
கோவை: பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதற்காக கொடுக்கப்பட்ட பணத்துடன் ரேஷன் கடை ஊழியர் எஸ்கேப்பான நிலையில், போலீசார் அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சிரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அடுத்த இரண்டொரு நாட்களில், பொங்கல் பரிசுடன் ரூபாய் 1000 ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வருமான வரி செலுத்துவோர், மத்திய மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா ரேஷன் அட்டைதாரர்கள் தவிர்த்து, மற்றவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பொங்கல் பரிசுத்தொகை, ரேஷன் அரிசி வாங்கும் எல்லோருக்கும் கிடைக்கும் என பொங்கல் பரிசு டோக்கன் வாங்க காத்திருந்த மக்கள், லிஸ்ட்டில் தங்கள் பெயர் இல்லை எனச் சொல்லப்பட்டதால் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து பலத்த கோரிக்கைகள் எழுந்ததைத் தொடர்ந்து, நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், டோக்கன் பெறாதவர்களுக்கு பொங்கல் பரிசு எப்படி வழங்கப்படும் பற்றி தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை.
பொங்கலுக்கு முன்னதாக பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. பொங்கல் முடிந்த பிறகு வாங்கிக் கொள்ளலாம் என இருந்தவர்களுக்கு தற்போது பொங்கல் பரிசு மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் தொகுப்பு வாங்காதவர்கள் பற்றிய விபரங்களை அரசுக்கு அனுப்பிவிட்டதாகவும், இனி கிடைக்காது என்றும் நியாய விலைக் கடை ஊழியர்கள் தெரிவித்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள 11 லட்சத்து 4942 ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கு சம்மந்தப்பட்ட ரேசன் கடை ஊழியர்களிடம் பணம் வழங்கப்பட்டு இருந்தது. இதில் 10 லட்சத்து 31 ஆயிரத்து 876 ரேசன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 73 ஆயிரத்து 66 கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகையான ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படவில்லை.
பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்பட்டது போக, வழங்கப்படாத தொகையை அந்தந்த ரேஷன் கடை பொறுப்பாளர்கள், அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஆனால் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அமுதம் அங்காடி ரேஷன் கடையில் விற்பனையாளாராக பணியாற்றும் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த மதியரசு என்பவர் பொங்கல் பரிசுத்தொகை பணத்தை திரும்ப அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல் இருந்துள்ளார்.
இது குறித்து, சம்பந்தப்பட்ட அந்த அமுதம் அங்காடியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது 841 குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுப்பதற்காக ரூபாய், 8 லட்சத்து 41 ஆயிரம் பணம் வழங்கப்பட்ட நிலையில், 719 பேருக்கு முறையாக பணத்தை கொடுத்து இருப்பதும், 122 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்காமல் இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து, 1,22,000 ரூபாய் பணத்தை திரும்ப ஒப்படைக்குமாறு அதிகாரிகள் தெரிவித்த நிலையில், ரேஷன் கடை ஊழியர் மதியரசு பணத்துடன் தலைமறைவானார். இது குறித்து கடை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் மதியரசு மீது சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்ட பணத்தோடு தலைமறைவாக உள்ள மதியரசுவை போலீசார் தேடி வருகின்றனர். பொங்கல் பரிசுத் தொகையை ரேஷன் கடை ஊழியர் கையாடல் செய்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் வலை வீசித் தேடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பெரும் தலைகளையே ‘போட்டுப் பார்த்த’ வாக்காளர்கள்.. காமராஜர், அண்ணாவை தோற்கடித்த தேர்தல் வரலாறு! -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
சென்னையில் கொளுத்தப்போகும் வெயில்.. இன்றும் நாளையும் 100 டிகிரியை தாண்டும்! உஷார் மக்களே! -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
உத்தரப் பிரதேசம் vs தமிழ்நாடு! லோக்சபா தொகுதி மறுவரையறையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஷாக் தகவல்! -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா












Click it and Unblock the Notifications