கோவை அருகே வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட கார்.. திக் திக் நிமிடங்களை விவரிக்கும் உயிர் தப்பியோர்!
கோவை: கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 2 கார்கள் மழைநீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள், திக் திக் நிமிடங்களை விவரித்துள்ளனர்.
கோவையை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று கோவை மாவட்டத்தில் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று காலை முதல் கோவை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் வெயில் அடித்த நிலையில் மாலை முதல் கனமழை பெய்ய துவங்கியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கோவை ரயில் நிலையம் சாலை, மருத்துவமனை சாலை, சுங்கம், ரேஸ்கோர்ஸ், அவினாசி சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. கோவை லங்கா கார்னர் ரயில்வே பாலம், அவினாசி ரோடு பழைய மேம்பாலத்தின் கீழ் பகுதி, வடகோவை மேம்பாலம், சிவானந்தா காலனி ரயில்வே சுரங்கப்பாதை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது.
அதேபோல, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு ஏழு மணியளவில் தொடங்கிய மழை இடி மின்னலுடன் இரண்டு மணிநேரம் கொட்டித் தீர்த்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை அனுபவித்தனர்.
இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் சாலையில் மத்தம்பாளையம் அருகே கோட்டைப்பிரிவு பகுதியில் இருந்து கோவில்பாளையம் செல்லும் வழியில் உள்ள ஏழு எருமை பள்ளம் பகுதியில் இருந்த இரு கார்கள் மழைநீரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டன.

இதை அறிந்து அந்த இடத்திற்கு சென்ற அப்பகுதி பொதுமக்கள் அந்த கார்களை மீட்டனர். கார்களில் இருந்த 5 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். வெள்ளத்தில் கார்கள் சிக்கிய நிலையில், அதில் இருந்து மீட்கப்பட்ட 5 பேர், திக் திக் நிமிடங்களை விவரித்துள்ளனர்.
கோட்டைப்பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற புள்ளியியல் துறை உதவி இயக்குநர் ரவிக்குமார், அவரது மகள் ஜெனிபர் மற்றும் 2 வயது குழந்தை ஆகியோர், வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட காரில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர். குழந்தையை கார் கண்ணாடி வழியாக வாங்கிக்கொண்ட மக்கள், பின்னர் வரிசையாக நின்று கையைப் பிடித்து காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.
இதுகுறித்து ரவிக்குமார் கூறுகையில், "கோட்டைப்பிரிவு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஊசி போடுவதற்காக அவசரமாக போக வேண்டிருந்ததால் கிளம்பினோம். மழைநீர் அதிகமாக சென்றுகொண்டிருந்தாலும், போய்விடலாம் என நினைத்து சென்றுவிட்டோம். பாதியில் வந்து மாட்டிக்கொண்டோம். காருக்குள் தண்ணீர் வந்துவிட்டதால் என்ன செய்வதென்றே புரியாத நிலையில் இருந்தோம்.
இப்பகுதி மக்கள் எங்களுக்கு உதவிய நிலையில், அவர்களின் உதவியோடு வெளியில் வந்துவிட்டோம். அந்த இருட்டில் எங்களை காப்பாற்றியது யார் என்று அடையாளம் காண முடியவில்லை. காப்பாற்றிய ஒவ்வொருவருக்கும் நன்றி. உங்களால் தான் நாங்கள் இன்று உயிரோடு இருக்கிறோம்." என உருக்கமாகத் தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications