கோவை செம்மொழி பூங்கா.. நுழைவுக் கட்டணம் இதுதான்.. மெட்ரோ விவகாரத்தால் அதிர்ந்த மாநகராட்சி கூட்டம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை செம்மொழிப் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் அண்மையில் திறந்து வைத்தார். டிசம்பர் 1 ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், கோவை செம்மொழிப் பூங்காவில் பெரியவர்களுக்கு 15 ரூபாயும், சிறியவர்களுக்கு ஐந்து ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கல்வி, மருத்துவம், தொழில், வேலைவாய்ப்பு, ஐடி துறை, தொழில் துறை என வளர்ச்சி பெற்ற மாவட்டமாகும். பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக இங்கு வந்து தங்கி வசித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப பொழுதுபோக்கு இடங்கள் பெரிய அளவில் இல்லை. இந்த குறையைப் போக்கும் வகையில் செம்மொழி ப் பூங்கா அமைக்கும் பணி விரைவில் நிறைவடையவுள்ளது.

resolution-was-passed-in-the-corporation-to-set-the-fee-for-coimbatore-semmozhi-park

கோவையில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்று 2010ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்பின் ஆட்சி மாற்றம் நடந்ததால், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து 2023ஆம் ஆண்டு காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் ரூ.208.50 கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட உள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் செம்மொழிப் பூங்கா நுழைவு கட்டணத்தை மறு நிர்ணயம் செய்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, செம்மொழி பூங்காவில் பெரியவர்களுக்கு 15 ரூபாய், குழந்தைகளுக்கு 5 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், நடைபாதை உபயோகிப்பதற்கு மாதாந்திர கட்டணமாக 100 ரூபாயும், கேமராவிற்கு 25 ரூபாயும், வீடியோ கேமராவிற்கு 50 ரூபாயும், திரைப்பட ஒளிப்பதிவுக்கு நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் எனவும், குறும்படம் முழு பதிவுக்கு 2000 ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து கோவை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. திமுக அரசு திட்ட அறிக்கையை முறையாக தயாரிக்கவில்லை என கூறிய அதிமுக கவுன்சிலர்களுடன் திமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாததில் ஈடுபட்டதுடன், பதாகைகளை கிழித்து எறிந்ததால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.

கோவை மாநகராட்சி கூட்டத்திற்கு முன்பு மாநகராட்சி வளாகத்தில், கோவைக்கு மெட்ரோ திட்டத்தை வரவிடாமல் திமுக தவறான தகவல்களை கொடுத்து இருப்பதாக கூறி தரையில் அமர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை வர விடக்கூடாது என்ற அடிப்படையில் தவறான திட்ட அறிக்கையை திமுக அரசு தயார் செய்ததாக கூறி கையில் பதாகையுடன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்காத மோடி அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவைக்கு மெட்ரோ திட்டத்தை மோடி அரசு புறக்கணித்து விட்டதாக கூறி முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்தினர். கோவை
மாநகராட்சி மன்றம் வளாகம் முன்பு இரண்டு தரப்பும் மாறி மாறி முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாநகராட்சி கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் துவங்கியது. கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் மத்திய அரசை கண்டித்து மாமன்ற கூட்டதில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திப் பேசினர்.

அப்போது, அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், திமுக அரசு மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை முறையாக தயாரிக்காததால் தான் திட்டம் பறிபோனது என தெரிவித்தார். மேலும் அது தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி படி நின்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோரை சூழ்ந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.

அப்போது, அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் திமுக கூட்டணி கவுன்சிலர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் நிலவியது. இதன் காரணமாக மாமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும், அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கையில் வைத்திருந்த பதாகைகளை திமுக கவுன்சிலர்கள் பிடுங்கி கிழித்து எறிந்தனர். இதைத்தொடர்ந்து, அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகிய இருவரும் கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, மீண்டும் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து கோவை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மாநகராட்சி கூட்ட அரங்கில் ரகளையில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் இரு மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்யப்படுவதாகவும் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி கூட்டத்தில் அறிவித்தார்.

மாநகராட்சி கூட்ட அரங்கில் அதிமுக கவுன்சிலர்களுக்கும், திமுக கூட்டணி கவுன்சிலர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பரபரப்பான சூழல் நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+