கோவா இனி ஈஸி.. கண்ணா இரண்டு லட்டு திண்ண ஆசையா.. கோவைக்கு ஒரே நாளில் இரண்டு குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: சுற்றுலா நகரமான கோவாவிற்கும், தொழில் நகரமான கோவைக்கும் இடையே மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கி உள்ளது.. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக உள்ள கோவையில் சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. தமிழ்நாட்டின் நான்கு முக்கிய விமானங்களில் கோவையும் ஒன்று.. கோவையில் இருந்து தினமும் சென்னை, டெல்லி, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நாட்டின் பிற நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது.

Resumption of Coimbatore-Goa flights: Two good news for the people of Coimbatore in one day

இது தவிர வெளிநாடுகளை பொறுத்தவரை சார்ஜா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாக ஒரு நாளைக்கு கோவையில் இருந்து 23 முதல் 28 விமானங்கள் வரை இயக்கப்படுகிறது. கோவை விமான நிலையத்தை கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் உள்ள மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

கோவையில் இருந்து முன்பு கோவா மற்றும் ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கோவா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவைகள் கடந்த சில நாட்களுக்கு முன் சில நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் கோவாவிற்கு சுற்றுலா செல்ல முடியாமல் கோவை பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனிடையே நிறுத்தப்பட்ட இந்த விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கோவை-கோவா இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. நாளை மறுநாள் ஹைதராபாத் நகருக்கும் விமான சேவை இயக்கப்பட உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினார்கள். கோவை-கோவா இடையே விமான சேவை ஒரு நாள் விட்டு ஒரு நாள் இயக்கப்படுகிறது.

இந்த விமானம் காலை 10 மணிக்கு கோவாவில் இருந்து புறப்பட்டு கோவையை பகல் 11.25 மணிக்கு வந்தடையும், பின்னர் கோவையில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்படும் விமானம் கோவாவை பகல் 1.15 மணிக்கு சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்து. இந்த விமானத்தில் பயணம் செய்ய ஒருவருக்கு கட்டணமாக ரூ.4 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்த கோடை விடுமுறையை கோவையில் உள்ளவர்கள் கோவாவில் கொண்டாட முடியும். வெறும் ஒரு மணி நேர பயணத்தில் கோவா போக முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+