கோவையில் 3500 சதுர அடிக்கு மேல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு வரைபட அனுமதி கட்டணம் எவ்வளவு?
கோவை: கோவை மாநகராட்சியில் கட்டப்படும் கட்டிட ஒப்புதலுக்கு சதுர அடிக்கு செலுத்த வேண்டிய கட்டணம் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதன்படி கோவை மாநகராட்சி பகுதியில் 3,500 சதுர அடிக்கு மேல் குடியிருப்பு கட்டிடம் கட்ட ஒரு சதுர அடிக்கு ரூ.88-ம், வணிக கட்டிடங்களுக்கு ரூ.110-ம் வரைபட அனுமதி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 3,500 சதுர அடிவரையிலான தவிர்த்து, இதர குடியிருப்பு மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டிட வரைபட அனுமதி குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கோவையில் தற்போது வரை 2,500 சதுர அடி பரப்பளவில் உள்ள இடங்களில் 3,500 சதுர அடிக்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு கட்டிட வரைபட அனுமதி கட்டணம் ஒரு சதுர அடிக்கு ரூ.88-ம், சிறப்பு நிலை நகராட்சிகளுக்கு ரூ.74, தேர்வு நிலை நகராட்சிகளுக்கு ரூ.74, ஒன்றாம் நிலை நகராட்சிகளுக்கு ரூ.70, 2-ம் நிலை நகராட்சிகளுக்கு ரூ.70, சிறப்பு நிலை பேரூராட்சிகளுக்கு ரூ.70, தேர்வு நிலை பேரூராட்சிகளுக்கு ரூ.65, ஒன்றாம் நிலை பேரூராட்சிகளுக்கு ரூ.55, 2-ம் நிலை பேரூராட்சிகளுக்கு ரூ.45 நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது அந்த கட்டண விகிதம் மாறி உள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி நிர்வாகம் கட்டிட வரைபட அனுமதி சுய சான்றளிப்பு அடிப்படையிலான குடியிருப்பு கட்டிடங்கள் 3,500 சதுர அடிவரையிலான தவிர்த்து, இதர குடியிருப்பு மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டிட வரைபட அனுமதி வழங்குதலுக்கு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி கோவை மாநகராட்சியில் கட்டிட வரைபட அனுமதி கட்டண விவரங்களை பார்ப்போம்.
கோவையில் குடியிருப்பு, வணிக கட்டிடங்களுக்கு வரி எவ்வளவு
கோவை உள்ளிட்ட சிறப்பு நிலை மாநகராட்சிகள் (ஏ) 3,500-க்கு மேல் 10 ஆயிரம் சதுர அடிக்குள் ஒரு சதுர அடிக்கு ரூ.88 கட்டணம். குடியிருப்பு அல்லாத வணிக கட்டிடங்களுக்கு ஒரு சதுர அடி ரூ.110.
சிறப்பு நிலை நகராட்சிகள் 3,500 சதுர அடிக்கு மேல் உள்ளவற்றுக்கு ஒரு சதுர அடி ரூ.74, தேர்வுநிலை நகராட்சிகள்-ரூ.74, ஒன்றாம் நிலை நகராட்சிகள்-ரூ.70, 2-ம் நிலை நகராட்சிகள்-ரூ.70.
குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 3,500 சதுர அடிக்குமேல் உள்ளவற்றுக்கு சிறப்பு நிலை நகராட்சிகள்-ரூ.93, தேர்வு நிலை நகராட்சிகள் -ரூ.93, ஒன்றாம் நிலை நகராட்சிகள் ரூ.87, 2-ம் நிலை நகராட்சிகள் ரூ.87.
கோவையில் பாதாள சாக்கடை வைப்புத்தொகை எவ்வளவு
பாதாள சாக்கடை திட்ட வைப்புத்தொகை 3,500 சதுர அடிக்கு கீழ் ரூ.10 ஆயிரம், 3,500 சதுர அடிக்கு மேல் ரூ.15 ஆயிரம். குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 3,500 சதுடிஅடிக்கு கீழ் பாதாள சாக்கடை திட்ட கட்டணம் ரூ.20 ஆயிரம், அதற்கு மேல் -ரூ.30 ஆயிரம்.
நகராட்சிகள் 3,500 சதுர அடிக்கு கீழ் ரூ.7,500, குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு ரூ.15 ஆயிரம். 3,500 சதுர அடிக்கு மேல் ரூ.10 ஆயிரம். குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 3,500 சதுர அடிக்கு கீழ் ரூ.15 ஆயிரம், 3,500 சதுர அடிக்கு மேல் ரூ.20 ஆயிரம். கட்டிட வரைபட ஒப்புதலுக்கு காலிமனை வரி, பாதாள சாக்கடை கட்டணம் செலுத்தப்பட்டு அதற்குரிய ரசீது நகலை அனுமதி விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வே்ணடும்" இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications