இன்னொரு பொள்ளாச்சி.. கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது.. மாணவிகளை துன்புறுத்திய ஐவரின் அட்டகாசம்!
கோவை: இன்னொரு பொள்ளாச்சி சம்பவமா.. நினைச்சாலே இன்னமும் நடுங்கி போகும் நிலையில், அதேபோல கொடூரம் நடந்துள்ளது.
ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் முகமது சபீர். இவரது நண்பர்கள்தான் வசந்தகுமார், முகமது அர்ஷத், கமர்தீன், முகமது ரியாஸ் ஆகியோர். இந்த 5 பேரும் எப்போதுமே ஒன்றாக சுற்றி திரிபவர்கள் என்று சொல்லப்படுகிறது. 21 வயசைகூட தாண்டாதவர்கள் இவர்கள்!

இவர்கள் அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளி மாணவிகளை காதலிக்க வற்புறுத்தி உள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்தும் அவர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளனர்.
மாணவிகள் பள்ளிக்கு போகும்போதும், வரும்போதும், இதற்காகவே காத்திருந்து, தினந்தோறும் அவர்களின் கையை பிடித்து இழுப்பது, கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது என்று டார்ச்சர் செய்துள்ளனர். மாணவிகளை கட்டாயப்படுத்தி இப்படி செய்வதை செல்போனில் போட்டோவாகவும் எடுத்து வைத்து கொண்டனர்.
மேலும் இந்தப் போட்டோக்கள் அனைத்தையும், இணையத்தில் பதிவிட்டதாகவும் தெரிகிறது. இந்த விஷயம் மாணவிகளின் வீட்டுக்கு தெரியவந்ததையடுத்து, அவர்களின் பெற்றோர்கள், இளைஞர்களிடம் தட்டி கேட்டுள்ளனர். அதற்கு பெற்றோரையும் இளைஞர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பெற்றோர் ஆனைமலை போலீஸில் 5 பேர் பற்றியும் புகார் அளித்தனர். அதன்பேரில் இளைஞர்கள் 5 பேரையும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவர்களில் முகம்மது சபீர் மீது மட்டும் கூடுதலாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி சம்பவத்துக்கே இன்னும் ஒரு தீர்வும் கிடைக்காத நிலையில், தொடர்ந்து இளம் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகள் பலர் பாதிக்கப்பட்டு வருவது கோவை மாவட்டம் மட்டுமின்றி, தமிழக மக்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications