16 வயதுதான் மாணவிக்கு.. பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக போனார்.. நாசம் செய்த 4 நண்பர்கள்! கோவையில் கொடுமை
சென்னை: 16 வயதுதான் ஆகிறது அந்த சிறுமிக்கு... ஆனால், பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சென்ற அவருக்கு வயதில் மூத்த வாலிபர்களால் பெரும் அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது.
கோவையில்தான் இந்த கொடுமை அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக 4 பேரை கோவை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அப்பகுதியிலுள்ள ஒரு பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ராகுல் (22), பிரகாஷ் (22), நாராயணமூர்த்தி (32), கார்த்திகேயன் (22) போன்ற வயதில் மூத்த வாலிபர்களுடன், அந்த மாணவிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் சில தினங்கள் முன்பாக, நண்பரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக அந்த மாணவி கூறியுள்ளார். அவரது பெற்றோரும், மாணவியை தனியாக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சென்ற இடத்தில் கிடைத்த தனிமையை பயன்படுத்திக் கொண்டு, மணிகண்டன் என்ற வாலிபர், மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.
இதை ராகுல், பிரகாஷ் உள்ளிட்ட மற்ற 4 நண்பர்களும் வீடியோ எடுத்து ரசித்துள்ளனர். கடும் உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, அழுதபடியே வீடு திரும்பியுள்ளார். ஆனால் வழக்கமான உற்சாகமின்றி மாணவி, சோர்வாகவும், அழுதபடியும் இருப்பதை கவனித்த அவரது பெற்றோர், அதுபற்றி கேட்டுள்ளனர்.
அப்போதான், நடந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதைத்தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுல் உள்ளிட்ட 4 பேரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணிகண்டனை தேடி வருகிறார்கள்.
பிறந்த நாள் கொண்டாட சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடுமை, கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications