கோவையில் பக்காவாக நடந்து முடிந்த ஜி20 அறிவியல் மாநாடு.. ஈஷா மையத்தில் குவிந்த சர்வதேச பிரதிநிதிகள்
கோவை: இந்தாண்டு ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஜி20 நாடுகளின் அறிவியல் மாநாடான சயின்ஸ் 20 மாநாடு நடைபெற்றது.
ஜி20 என்பது சர்வதேச அளவில் டாப் 20 பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் அமைப்பாகும்... உலக அளவில் நடக்கும் வர்த்தகத்தில் சுமார் 85% இந்த நாடுகளின் மூலமே நடக்கிறது.

இதன் காரணமாக ஜி20 அமைப்பு வலிமையான ஒன்றாக இருக்கிறது. ஜி20 மாநாடுகளில் எடுக்கப்படும் முடிவுகளும் சர்வதேச அளவில் முக்கியமானதாகவே பார்க்கப்படும்.. இந்த அமைப்பின் தலைமை பொறுப்பு சுழற்சி முறையில் வழங்கப்படும்.
கடந்தாண்டு இந்தோனேசியாவுக்கு இந்த ஜி20 நாட்டின் தலைமை பொறுப்பை வகித்தது.. இதற்கிடையே இந்தாண்டு இந்தியாவுக்குத் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எப்போதும் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டின் இறுதியில் நடக்கும். அதற்கு முன்பாக ஆண்டு முழுக்க பல்வேறு பிரதிநிதிகளின் மாநாடுகளும் தொடர்ச்சியாக நடைபெற்றும். அதன்படி இப்போது சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடந்து வருகிறது.
அதன்படி ஜி20 நாடுகளின் அறிவியல் மாநாடான சயின்ஸ் 20 (எஸ்20) மாநாடு கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜி20 நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், வல்லுநர்கள் என மொத்தம் 100க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு 'புதுமையான மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அறிவியல்'- ('Disruptive Science for Innovative and Sustainable Development') என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடக்கிறது. ஆற்றல், ஆரோக்கியம் மற்றும் கலாச்சாரத்துடன் அறிவியலை இணைப்பதே இதன் மையக் கருத்தாகும். திரிபுராவின் அகர்தலா, லட்சத்தீவு, மத்தியப் பிரதேசத்தின் போபால் ஆகிய இடங்களில் முன்பு இந்தக் கூட்டங்கள் நடந்தன.
இந்த சயின்ஸ் 20 நாட்டின் இறுதிக் கட்டம் தான் கடந்த 2 நாட்களாகக் கோவையில் நடந்து முடிந்துள்ளன. கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் 20 உறுப்பு நாடுகளில் இருந்து 100 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பிரதிநிதிகளுக்கு இந்தியக் கலாச்சாரம் மற்றும் யோக பாரம்பரியம் குறித்தும் விளக்கப்பட்டது.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இந்த எஸ்20 மாநாடு நடந்து வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய விவாதங்கள் குறித்தும் இந்த எஸ்20 மாநாட்டில் விவாதிக்கப்படும். இந்த எஸ்20 மாநாடு தான் இன்று கோவையில் நடந்து முடிந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications