கோவையில் காரில் கடத்தப்பட்ட பெண்.. நகை, ஓட்டல் ரூம்! சிசிடிவியில் பார்த்து அதிர்ந்த போலீஸ்! இவரா?
கோவை: தொழில்நுட்பம் பெருக பெருக, அது தொடர்பான குற்ற சம்பவங்களும் அதிகரித்தபடியே உள்ளன.. புதுவிதமான செயலிகள் தற்போது இணையத்தில் பரவி வரும் நிலையில், அதிலும் மோசடிகள் நடப்பது அதிகரித்துவிட்டன.. பம்பிள் டேட்டிங் ஆப் மூலம் கோவையில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. எனினும் கோவை போலீசார் துரிதமாக செயல்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
பம்பிள் டேட்டிங் ஆப் மூலம் பழகி இளம்பெண்ணை காரில் அழைத்து சென்று நகை, பணம் பறித்த டிஎஸ்பி மகன் உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் வசித்து வருகிறார் 25 வயது இளம்பெண்.. இவர், ரேஸ்கோர்சில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
கோவை லேடீஸ் ஹாஸ்டல்
இதற்காக கடந்த 6 மாதமாக கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியிருக்கிறார்.. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு செல்போனில் ஒரு ஆப் மூலம் தங்கபாண்டி தருண் (28) என்பவர் இளம்பெண்ணுக்கு அறிமுகமாகி உள்ளார். தருணும் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவராம்.. இதனால் அவருடன் நட்பாக பேசி பழகி வந்துள்ளார் இளம்பெண்..
இந்நிலையில், கடந்த 2ம் தேதி மாலை 6 மணிக்கு, இளம்பெண்ணை டேட்டிங் ஆப் மூலம் தொடர்பு கொண்ட தருண், நேரில் சந்திக்க விரும்புவதாக மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.. உடனே இளம்பெண்ணும், அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் 7 மணிக்கெல்லாம், தன்னுடைய காரை எடுத்து கொண்டு, தருண் இளம்பெண் தங்கியிருந்த லேடீஸ் ஹாஸ்டலுக்கு சென்றுவிட்டார்.. அங்கு தயாராக காத்து கொண்டிருந்த இளம்பெண்ணையும் அழைத்துக் கொண்டு க.க.சாவடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றிருக்கிறார்.
3 சவரன் தங்க நகைகள்
அங்குள்ள குளத்தின் அருகில் காரை நிறுத்தி இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது தருண், நண்பர் தனுஷ் என்பவரை செல்போனில் பேசி வரவழைத்துள்ளார். பிறகு நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை மிரட்டி மோதிரம், செயின், பிரேஸ்லெட் என 3 சவரன் தங்க நகைகளை பறித்து கொண்டனர்.
அந்த பெண்ணிடமிருந்து செல்போனில் 90 ஆயிரத்தை ஸ்கேன் செய்து எடுத்துக் கொண்டனர்.. பிறகு தருண், அந்த இளம்பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டு இரவு 11 மணியளவில் ஹாஸ்டல் முன்பு இறக்கி விட்டுள்ளார்.
ஹோட்டலில் ரூம் புக்கிங்
உடனே அந்த இளம்பெண், இரவு 11 மணியாகி விட்டதால் ஹாஸ்டலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்று சொல்லி உள்ளார்.. அதற்கு தருண், இளம்பெண்ணின் செல்போனை வாங்கி, கோவை- திருச்சி ரோட்டில் உள்ள ஹோட்டலில் ரூம் புக் செய்து தந்தார்.. அத்துடன், அந்த ஓட்டலிலும் இளம்பெண்ணை இறக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார்.
நள்ளிரவு நேரத்தில் வேறு எங்கே செல்வது என தெரியாமல் விழித்த அந்த பெண், தனக்காக தருண் புக் செய்திருந்த ஹோட்டல் ரூமுக்கு சென்றார்.. உடனடியாக தன்னுடைய சகோதரிக்கு போன் செய்து நடந்த விஷயத்தை கூறினார். பிறகு சிறிது நேரத்தில் சகோதரி நண்பர்களுடன் ஓட்டலுக்கு விரைந்து வந்து இளம்பெண்ணை மீட்டு, ரேஸ்கோர்ஸ் போலீஸிலும் புகார் அளித்தார்.
போலீஸ் அதிகாரி மகன்
இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.. அதில் தருணுடன் இணைந்து இந்த கொள்ளையை நடத்திய தனுஷ் என்பவர், திருச்சி போலீஸ் டிஎஸ்பியின் மகன் என்பது தெரிய வந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்..
இதையடுத்து போலீசார் தருண் மற்றும் தனுஷ் மீது வழக்குப்பதிந்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. ஏற்கனவே கோவை மாணவி சம்பவத்தின் அதிர்ச்சி விலகாத நிலையில், இந்த சம்பவம் கோவையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications