கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆர்எஸ்எஸ் அறிக்கையும் திமுக தலைவர் அறிக்கையும் ஒரே மாதிரி இருக்கு.. எடுத்து பாருங்க.. சீமான் தாக்கு

சிஏஏ எதிர்ப்பு குறித்து சீமான் கோவையில் உரையாற்றினார்

Google Oneindia Tamil News

கோவை: "இதுமாதிரி ஒரு முடிவை ஏர்வாடியில் பல ஆண்டுகள் அடைத்து வைத்திருக்கும் பைத்தியக்காரன்கூட எடுக்க மாட்டான்.. இப்படி ஒரு குடியுரிமை சட்டம் தேவையா? என்கிட்ட குடியுரிமை சான்றிதழ் இருக்கு.. ஆனா தர மாட்டேன்.. அப்படி கேட்டால், நான் இந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லைன்னு சொல்ல முடிவெடுத்துட்டேன்" என்று சீமான் அதிரடியாக முடிவை அறிவித்துள்ளார்.

கோவையில் நடந்த போராட்டத்தில் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: இந்தியா என்ற நாடு எப்போதும் இருந்ததில்லை, இனியும் இருக்க போவதில்லை என தந்தை பெரியார் சொன்னார்... வழக்கு போடுவது என்றால் பெரியார் மீது போட்டு விட்டு அப்புறம் என மீது போடட்டும்.

என்கிட்ட குடியுரிமை சான்றிதழ் இருக்கு.. ஆனா தர மாட்டேன்.. அப்படி கேட்டால், நான் இந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லைன்னு சொல்ல முடிவெடுத்துட்டேன்.. இதையே ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டும்.

அமைச்சர்களை தொடர்ந்து அதிகாரிகளுக்கும் ஜாக்பாட்... வெளிநாடுகளுக்கு பறக்க ஆயத்தம்அமைச்சர்களை தொடர்ந்து அதிகாரிகளுக்கும் ஜாக்பாட்... வெளிநாடுகளுக்கு பறக்க ஆயத்தம்

சான்றிதழ்

சான்றிதழ்

இந்திய குடிமகன் என்பதற்கு எதையெல்லாம் காட்ட வேண்டும் என்பதை இந்த அரசு சொல்லவில்லை. மொதல்ல நீங்க எல்லாரும் காட்டுங்க.. குடியுரிமை சான்றுகளை ஒருமுறை நாங்க பார்த்துக்கறோம்.. ஓ.. இதுதானா, நாங்களும் எடுத்து வந்து காட்டுகிறோம்.. நான் என் சான்றிதழுக்கு காட்டுகிறேன் என்றால், என் பெற்றோரின் பிறப்பு சான்றிதழையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.

குடிமக்கள்

குடிமக்கள்

பிறப்பு சான்றிதழ் வரைமுறையே 69-க்கு பிறகுதான்.. எனக்கு பிறப்பு சான்றிதழ் இருக்கு.. ஆனா என் அப்பா - அம்மாவுக்கு இல்லை.. ஏன்னா அப்போ அதுக்கு அவசியம் இல்லை.. அப்படின்னா நான் இந்திய குடிமகன், என் தாய் - தந்தையர் இந்திய நாட்டின் குடிமக்கள் இல்லையா? இதுமாதிரி ஒரு முடிவை ஏர்வாடியில் பல ஆண்டுகள் அடைத்து வைத்திருக்கும் பைத்தியக்காரன்கூட எடுக்க மாட்டான்..

சிஏஏ

சிஏஏ

நாட்டை இப்படி பதட்டமாக வைத்திருப்பதால் இந்தியன் ஏர்லைன்ஸ், எல்ஐசி விற்பனைக்கு வந்ததை யாரும் பேசவில்லை... குடியுரிமை பிரச்சினை ஆட்சியாளர்களுக்கு தேவைப்படுகின்றது.. ஏன்னா இதை வைத்து மக்களை திசை திருப்புகின்றனர்.. சிஏஏ இஸ்லாமியர் மக்களுக்கு எதிரானது இல்லை, ஒட்டு மொத்த மக்களுக்கும் எதிரானது... இவங்களை போல பிராடுகாரர்கள் யாரும் இருக்க முடியாது

பெரும்பான்மை

பெரும்பான்மை

காங்கிரஸ், பாஜக இவங்க 2 பேருக்கும் எந்த வித்தியாசம் கிடையாது நீட், ஜிஎஸ்டி, ஒரே நாடு ஓரே இந்தியா, என்பிஆர், சிஏஏ இதையெல்லாம் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி.. இவைகளை ஆதரித்தது திமுக.. பெரும்பான்மை இல்லாததால் அவர்கள் இதை நிறைவேற்றவில்லை .. பாஜகவிடம் பெரும்பான்மை இருந்ததால் நிறைவேற்றி இருக்கின்றனர்.. அவ்வளவுதான்!

திமுக

திமுக

பாபர் மசூதியை இடித்தது பாஜக, அதை இடிக்க அனுமதித்தது காங்கிரஸ், இதை யாராலும் மறுக்க முடியாது.. மாநில சுயாட்சி பேசும் திமுக, காஷ்மீரை இரண்டாக உடைத்தபோது திமுக தலைவர் ஸ்டாலின் இதை ஆதரிக்கின்றார்... பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு வந்த போது ஆர்எஸ்எஸ் அறிக்கையும் திமுக தலைவரின் அறிக்கையும் ஒரே மாதிரி இருந்தது.. எடுத்து பாருங்க இரண்டையும்.. நான் இந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை!" என்றார்.

English summary
naam tamizhar party seeman condemns CAA and Accusation On Centra gov, congress including dmk
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X