சீமான் எங்கு போட்டியிட்டாலும் தோற்கத்தானே போறாரு.. வாய் இருக்குனு பேசக்கூடாது.. அண்ணாமலை அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

கோவை: பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் நின்றால் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன் என சீமான் கூறிய நிலையில், "சீமான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டுக் கொள்ளட்டும்.. தோற்கத்தானே போகிறார்" என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு தீவிரமாக எழுந்தது. 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடப் போவதாக பேசப்பட்டது. இதுகுறித்து அண்மையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட இருப்பதாக கூறுகின்றனர். அப்படி ஒருவேளை அவர் ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் நான் அவருக்கு எதிராக ராமநாதபுரத்தில் போட்டியிடுவேன்'' எனத் தெரிவித்தார்.

Seeman going to lose wherever he competes: Annamalai attacks

இந்நிலையில், கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அப்போது, வரும் நாடாளுடன்ற தேர்தலில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் நின்றால் எனக்கு ஒரு விடிவு காலம் வரும். ஏனென்றால் நான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று சீமான் கூறியிருந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, "வாரணாசி தொகுதியில் சீமான் பிரதமர் மோடியை எதிர்த்து நிற்கத் தயாரா?

சீமான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டுக் கொள்ளட்டும். அவர் போட்டியிட்டு தோற்கத் தானே போகிறார். வாய் இருக்கிறது பேசுகிறார். எந்த ஊருக்கு போகிறோம் என்ற வழி தெரிந்தால் தான் கடினம் ஆனால் எந்த ஊருக்கு போகிறோம் என்பதே தெரியவில்லை என்றால் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம் தானே. சீமான் ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்த பிறகு எங்கு போட்டியிட்டால் என்ன?

மோடி வாரணாசியில் போட்டியிட்டு அந்த தொகுதியை அடிப்படையில் இருந்தே மாற்றி விட்டார். தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தை பொறுத்தவரை இந்தியாவினுடைய மோசமான 112 மாவட்டங்களில் ஒன்றாக ராமநாதபுரம் உள்ளது. அதே போல தான் விருதுநகரும் உள்ளது. எனவே பிரதமர் இங்கு நிற்க வேண்டும் என்று மக்கள் விருப்பப்படுகிறார்கள்.

திமுகவில் அதிகமான ஊழல்வாதிகள் இருக்கிறார்களே அவர்களை எதிர்த்து சீமான் போட்டியிடட்டுமே, பிரதமர் என்ன ஊழல் செய்தார்? சீமான் திமுகவினரை எதிர்த்து வெற்றி பெற வேண்டுமே தவிர நல்லது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற மோடியை எதிர்த்து எதற்கு போட்டியிட வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பினார்.

Seeman going to lose wherever he competes: Annamalai attacks

மேலும் பேசிய அண்ணாமலை, "நமது அரசியலமைப்புச் சட்டம் மத்திய அரசுக்கு ஒரு பவர் மாநில அரசுக்கு ஒரு பவர் என்றுதான் உள்ளது. ஆனால் இங்கு ஒரு மாநில அரசு தன்னிச்சையாக தண்ணீர் வழங்கமாட்டேன் என்று கூறும் பொழுது அது அரசியலமைப்பு சட்டத்தையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. காங்கிரஸ் ஒரு பெரிய கட்சி.

பலமுறை ஆட்சியில் இருந்த கட்சி. கர்நாடக முதல்வரும் துணை முதல்வரும் புதியவர்கள் அல்ல. காவிரி நீர் பிரச்சனையைப் பொறுத்தவரை இவர்கள் நடந்துகொள்வது ஏதோ சிறு பிள்ளைகள் வந்து அரசியலமைப்பு சட்டத்தை மதிக்க மாட்டேன் என்று சொல்வது போல் உள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+