தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான்
கோயம்புத்தூர்: தன்னையும், தன் மக்களையும் நம்பாதவர்தான், ஒநே நேரத்தில் 2 தொகுதிகளில் போட்டியிடுவார் என்று, விஜய்யை மறைமுகமாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அட்டாக் செய்திருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இரு தினங்களுக்கு முன்னர் சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதனை தொடர்ந்து, நாளை திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

அவர் பேசியதாவது, "கூட்டத்தில் நிற்க எதுவும் வேண்டியதில்லை. ஆ, ஊ என கத்திவிட்டு போய்விடலாம். ஆனால், தனித்து நிற்பதுதான் வீரம். எனக்கு நேர்மை இருக்கிறது. உள்ளத்தில் தூய்மை இருக்கிறது. எனவே தனித்து நிற்கிறேன். 100 விழுக்காடு என் மக்களையம், என் மண்ணையும் சார்ந்து நிற்கிறேன். நான் நம்புகிறேன். தன்னையும், தன் மக்களையும் நம்பாதவன்தான், ஒநே நேரத்தில் 2 தொகுதிகளில் போட்டியிடுவான்.
ஆனால், வசனம் மட்டும் நான் மாஸ் என்று பேசுவார்கள். பெரிய ஹீரோ எனில் தனித்து நிற்க வேண்டும். ஒரே தொகுதியில் நிற்க வேண்டும். தனித்து நிற்க வேண்டும், ஒரே தொகுதியில் நிற்க வேண்டும். அதற்கான தைரியம் வேண்டும். நம்பிக்கையோடு இருங்கள்.. நாங்கள் வெல்வோம் என்று பேசுகிற நபர்.. தன்மீதே நம்பிக்கை இல்லாமல் 2 தொகுதியில் நிற்கிறார்.
நான் இரண்டு முறை நின்று தோற்றிருக்கிறேன். இருப்பினும் 3வது முறையாக காரைக்குடியில் தனித்து நிற்கிறேன். காரைக்குடியுடன் சேர்த்து.. திருவொற்றியூரில் களம் இறங்க நிறைய பேர் சொன்னார்கள். ஆனால், என் கொள்கைக்கு எதிரானது. ஒரே நேரத்தில் இரண்டு பதவிக்கு போட்டியிடுவது ஜனநாயக விரோதம். ஒரே நேரத்தில் 2 தொகுதிகளில் போட்டியிடுவது மக்கள் விரோதம்.
நாங்கள் தோற்றோம். வரலாற்றில் இப்படி யாரும் தோற்க முடியாது என்கிற அளவில் நாங்கள் தோற்றோம். ஆனால், எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. நாங்கள் தோற்றது, எங்கள் தாய், தந்தை, மாமன், மச்சான், சகோதர, சகோதரிகளிடத்தில்தான் தோற்றோம். இதற்காக பெருமைப்படுகிறோம்" என்று பேசியிருந்தார்.
-
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
அடித்து தூக்கும் விஜய்.. நில ஒதுக்கீட்டில் ராக்கெட் வேகம்.. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
பரந்தூர் திட்டம் கைவிடப்படுகிறதா? விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் - விஜய் புதிய வியூகம்! -
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் அடுத்த நாள் பணியில் இருக்க முடியாது.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications