இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் தீவிரம் காட்டுகிறார்கள். இதில் பணம், பரிசு மழை என்று கோவை அதிக கவனம் ஈர்த்து வருகிறது. இந்நிலையில் கோவை வேட்பாளர் தேர்வில் செந்தில் பாலாஜி பல்வேறு ட்விஸ்ட்களை வைத்துள்ளாராம்.
கோவை மாவட்டத்தை அதிமுக கோட்டையாக தக்க வைப்பதற்கு எஸ்.பி. வேலுமணி முயற்சி செய்கிறார். கோவையை தங்களின் கோட்டையாக மாற்றுவதற்கு செந்தில் பாலாஜி காய் நகர்த்துகிறார். கோவையை பொறுத்தவரை செந்தில் பாலாஜி, வேலுமணி இருவருமே கூட்டணி கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்குவதற்கு தான் திட்டமிட்டுள்ளார்களாம்.

கோவை திமுக கூட்டணி
அதன்படி அதிமுக கூட்டணியில் கோவையில் 1-2 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கவுள்ளனர். அதிமுகவில் வால்பாறை, கிணத்துக்கடவு, கோவை வடக்கு தொகுதிகளை தவிர மீதியுள்ள தொகுதிகளில் சிட்டிங் எம்எல்ஏக்களே மீண்டும் களமிறங்கவுள்ளனர். ஆனால் திமுகவில் தற்போதுவரை கோவை வேட்பாளர்கள் யார் என்று கெஸ் செய்ய முடியாத நிலை நிலவுகிறது. .
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கோவையில் 3 தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டன. இந்தமுறை காங்கிரஸ், கொமதேக, சிபிஎம், சிபிஐ, தேமுதிக, மநீம, ஆதி தமிழர் பேரவை என்று கூட்டணியில் உள்ள மூன்றில் ஒரு பங்கினர் கோவையில் சீட் எதிர்பார்க்கிறார்களாம். ஆனால் கடந்தமுறை போல மொத்தமுள்ள பத்து தொகுதிகளில் மூன்று தொகுதிகளையெ கூட்டணிக்கு ஒதுக்க முடிவுவாகியுள்ளது.
அவுட் ஆஃப் சிலபஸ்
கோவை வடக்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, சூலூர் ஆகிய ஐந்து தொகுதிகளில் ஏதாவது 3 தான் கூட்டணிக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாம். என்று முடிவாகியுள்ளது. இதுபோக மீதியுள்ள ஏழு தொகுதிகளில் திமுக வேட்பாளர் யார் என்ற கேள்வியோடு கோவைக்கும், அறிவாலயத்திற்கும் திமுக நிர்வாகிகள் முட்டி மோதி வருகிறார்கள்.
கோவை திமுக நிர்வாகிகள் கூறுகையில், "செந்தில் பாலாஜியின் அரசியல் பாணியை எளிதில் யூகிக்க முடியாது. 2022 உள்ளாட்சி தேர்தலில் கோவை மேயர் பதவிக்கு பலருக்கும் தெரிந்திராத கல்பனாவை மேயராக பதவியேற்க வைத்தார். 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது செந்தில் பாலாஜி சிறையில் இருந்தார். ஆனாலும், அப்போது ரேஸிலேயே இல்லாத கணபதி ராஜ்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட செந்தில் பாலாஜி தான் காரணம்.
ட்விஸ்ட்
தங்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி வேலை செய்பவர்களை விட அமைதியாக இருப்போரை தான் செந்தில் பாலாஜி டிக் செய்வாராம். முக்கியமாக அவர்கள் தனக்கு விசுவாசமாக இருக்கிறார்களா என்பதை அறிந்துதான் வேட்பாளர் தேர்வை இறுதி செய்வார். அப்படி ஒவ்வொரு தொகுதிக்கும் அவர் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டார். இதில் உடன்பிறப்புகளுக்கு பல சர்ப்ரைஸ், ட்விஸ்ட்கள் காத்திருக்கிறது" என்றார்கள்
-
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக












Click it and Unblock the Notifications