கோயம்புத்தூரில் அதிமுக, பாஜகவை இப்போதும் அலறவிடும் செந்தில் பாலாஜி.. செய்த சம்பவம் அப்படி
கோவை : கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 2021 சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில் கூட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஜெயிக்கவில்லை.. 10 தொகுதிகளிலும் தோல்வியே கிடைத்தது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி 10க்கு 10 இடங்களில் வெற்றி பெற்றது. அப்படிப்பட்ட கோவையில் செந்தில் பாலாஜி களம் இறக்கப்பட்டிருக்கிறார். அவரை ஸ்டாலினே கோவைக்கு அனுப்பி வைத்திருந்ததால், அதிமுக, பாஜக ஆடிப்போயிருக்கின்றன. ஏனெனில் 2021க்கு பிறகு செந்தில் பாலாஜி கோவையில் செய்த சம்பவம் அப்படி.. விவரமாக பார்ப்போம்.
தமிழகத்தில் 2021 சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வெற்றி பெற்றது. சென்னையில் அதிமுகவை ஒயிட்வாஸ் செய்த திமுக, திருச்சி உள்ளிட்ட தென்மண்டலங்களிலும் சரி, வட மாவட்டங்களிலும் சரி மொத்தமாக காலி செய்தது. இந்த பகுதிகளில் எல்லாம் விரல் விட்டு எண்ணக்கூடிய தொகுதிகளை தான் அதிமுக பெற்றது.

எஸ்பி வேலுமணி காரணம்
ஆனால் ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும் ஒரு தொகுதியில் கூட திமுக ஜெயிக்கவில்லை என்றால் அது கோவை மாவட்டம். அதிமுக 10க்கு 10ம் ஜெயிக்க எடப்பாடி பழனிசாமியின் போர்ப்படை தளபதியான எஸ்பி வேலுமணி முக்கிய காரணமாக இருந்தார். கொங்கு மண்டலத்தில் எடப்பாடிக்கு உள்ள செல்வாக்கால் 75 இடங்களில் வென்று வலுவான எதிர்க்கட்சியாகவே அதிமுக அமர்ந்தது.
திமுகவை ஜெயிக்க வைத்தவர்
அப்படி அதிமுகவிற்கு சாதகமான கோவையில் அடுத்த சில மாதங்களிலேயே உள்ளாட்சி தேர்தல் வந்தது. அதில் செந்தில் பாலாஜி களம் இறக்கப்பட்டார். அங்கு அவர் பம்பரமாக வேலை செய்து மொத்த கோவை மாவட்டத்திலும் திமுகவை உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற வைத்தார்.
அண்ணாமலை கோவையில் தோற்றது எப்படி
அதேபோல 2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை எப்படியும் ஜெயிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்காக சாத்தியங்களை உடைத்தவர் செந்தில் பாலாஜி. அண்ணாமலைக்கு கோவை நகர்புறங்களில் நல்ல வாக்குகள் கிடைத்தது. ஆனால் அண்ணாமலை தோற்க சூலூர் மற்றும் பல்லடம் ஆகிய தொகுதிகள் தான் முக்கிய காரணமாக இருந்தது. நகர்புறங்களில் அண்ணாமலைக்கு கிடைத்த ஆதரவை கிராமப்புறங்களில் முறியடிக்க செந்தில் பாலாஜியின் வியூகம் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
அண்ணாமலை தோற்க செந்தில் பாலாஜி காரணம்
2021 சட்டசபை தேர்தலில் அண்ணாமலை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தோற்கவும் செந்தில் பாலாஜி தான் முக்கிய காரணமாக இருந்தார். திமுகவிற்கு பலமாக உள்ள செந்தில் பாலாஜி, அதிமுகவின் வியூகங்கள் அத்தனையும் அறிந்தவர்..களபணியில் அதிமுகவை கடுமையாக எதிர்கொள்ள வியூகங்களை வகுப்பவர். இதனால் செந்தில் பாலாஜியை நம்பி ஸ்டாலின் தற்போது கோவை மாவட்டத்தை வென்று காட்டும் பொறுப்பை திமுக தலைவரும் , முதல்வருமான ஸ்டாலின் கொடுத்துள்ளார்.
அண்ணாமலை வானதி சீனிவாசன் கோபம்
இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுக, பாஜக வேட்பாளர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். செந்தில் பாலாஜி தான் கோவையில் தற்போது அதிமுக, பாஜகவினரால் கடுமையாக விமர்சிக்கப்படும் நபராக இருக்கிறார். கடந்த ஒரு வாரமாகவே அண்ணாமலை முதல் வானதி சீனிவாசன் வரையில் செந்தில் பாலாஜி தான் விமர்ச்சிக்கப்படும் நபராக இருக்கிறார். கோவை தெற்கு தொகுதியில் களம் இறங்கி உள்ள செந்தில் பாலாஜி, அதிமுகவின் வலுவான வேட்பாளரான அம்மன் அர்ஜுனனை எதிர்த்து களம் இறங்கி உள்ளார். இதனால் அந்த தொகுதியில் கள நிலவரம் கடும் போட்டியாகி உள்ளது.
மைக்ரோ மேனேஜ்மென்ட்
ஏனெனில் செந்தில் பாலாஜி ஒரு தேர்தலில் நிற்கிறார் அல்லது வேலை செய்கிறார் என்றால், அந்தத் தொகுதி முழுவதும் மைக்ரோ மேனேஜ்மென்ட் தெளிவாக செய்வார். அதாவது, ஒவ்வொரு தெருவிலும் இருக்கும் வாக்குகள், மக்களின் நாடிதுடிப்பு, பூத் கமிட்டி வேலைகள் என அனைத்தையும் மிகத் துல்லியமாகத் திட்டமிடுவார். இவருடைய தேர்தல் வேலை செய்யும் வேகம் மற்ற வேட்பாளர்களுக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கிறது. கோவை தெற்கில் மட்டுமல்ல.. மொத்தமாக உள்ள 10 தொகுதிகளிலும் செந்தில் பாலாஜி இந்த முறை கடுமையான வியூகத்தை வகுத்திருப்பதால் அதிமுக, பாஜகவினர் கடுப்பில் இருக்கிறார்கள்.
-
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி!












Click it and Unblock the Notifications