ஒரே டோக்கன் கோவை வடக்கில் பாஜக கதை குளோஸ்.. செந்தில் பாலாஜியால் வானதி ஷாக்

Subscribe to Oneindia Tamil

கோவை: சட்டமன்ற தேர்தலில் அதிக திருப்பங்கள், பரபரப்புகள் இருந்தது கோவையில் தான். வாக்குப்பதிவின் போது கூட கோவை அதிக கவனம் ஈர்த்தது. கோவையில் தெற்கு தொகுதிக்கு மட்டுமல்லாமல், பாஜக போட்டியிட்டுள்ள கோவை வடக்கு தொகுதியிலும் திமுக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. கரூர் பாணியில் அங்கு தங்க நாணயம் கொடுப்பதற்கான டோக்கனை இறக்கி திமுக டிவிஸ்ட் கொடுத்துள்ளது. இதனால் வானதி அதிர்ச்சியடைந்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. அதிமுகவின் கோட்டையாக உள்ளது, கோவை மாவட்டத்தை கைப்பற்ற திமுக முனைப்பு காட்டுகிறது. இதனால் திமுக அதிமுக இடையே அங்கு உச்சகட்ட அதிகார யுத்தம் வெடித்து கொண்டிருக்கிறது. திமுகவை கரை சேர்த்துவதற்காக கரூரில் இருந்து செந்தில் பாலாஜி களமிறங்கினார்.

Senthil Balaji Vanathi

கோவை வடக்கு தொகுதி

அதிமுகவின் வெற்றியை தக்க வைக்க வேலுமணி முயற்சி செய்து வருகிறார். பிரச்சாரத்தின்போது அங்கு பல டிவிஸ்ட்கள் நடந்தன. வாக்குப்பதிவுக்கு பிறகும் கூட அது தொடர்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. கோவை வடக்கு தொகுதியில் திமுகவின் செந்தமிழ்செல்வன், அதிமுக கூட்டணியில் பாஜகவின் வானதி சீனிவாசன் போட்டியிட்டுள்ளனர்.

வானதி சீனிவாசனுக்கு பிரச்சாரத்தின்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் மீண்டும் களத்தில் இறங்கி தீவிர பிரச்சாரம் செய்தனர். மத்திய அமைச்சர்கள், வட மாநில முதலமைச்சர்கள், திரை பிரபலங்கள் என்று வானதி பெரிய பட்டாளத்தையே இறக்கி பிரச்சாரம் செய்தார். மேலும் வானதியின் கணவர், மகன்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தங்கத்தை இறக்கிய திமுக

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் வானதி வெற்றி பெற்றார். அந்த தொகுதியை கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்திருந்தனர். காங்கிரஸ் அலட்சியமாக இருந்ததால் தான் வானதி வெற்றி பெற்றார். இந்தமுறை கோவையில் பாஜகவை வெற்றி வைக்க விடக்கூடாது என்று வானதிக்கு எதிராக நேரடியாக திமுக போட்டியிட்டுள்ளது.

வடக்கு தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் திமுக ரூ.2,500, பாஜக ரூ.1,000 பட்டுவாடா செய்தனர். போட்டி கடுமையாக இருப்பதாலும், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக வாக்குப்பதிவுக்கு முன்பு திமுக தங்க அஸ்திரத்தை கையில் எடுத்தனர். கரூர் தொகுதியில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு அரை கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது.

வானதி ஷாக்

அதே மாதிரி கோவை வடக்கிலும் தங்க நாணயம் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். நேரம் குறைவாக இருப்பதால் தங்க நாணயத்திற்கான டோக்கனை கடந்த 2 நாட்களாக விநியோகம் செய்துள்ளனர். ஒருபக்கம் உதய சூரியன் சின்னம், மறுபக்கம் க்யூ ஆர் கோட் ஆகியவற்றுடன் ஒரு டோக்கனை திமுக பட்டுவாடா செய்துள்ளது. தேர்தலுக்கு பிறகு அந்த டோக்கனை கொடுத்து அரை கிராம் தங்க நாணயம் பெற்று கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.

இதனால் வானதி மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து வானதி செய்தியாளர்களிடம், "திமுகவினர் க்யூ.ஆர் கோட் மூலம் தங்கம் மற்றும் வெள்ளி நாணயம் வழங்குவதாக மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அவர்கள் வாக்காளர்களுக்கு வித விதமாக படம் காட்டினாலும் மக்கள் ஆட்சி மாற்றம் என்பதில் தெளிவாக உள்ளனர்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+