செந்தில் பாலாஜியின் முகத்திரை கிழிய போகுது.. கோவையில் அண்ணாமலை பேட்டி
கோவை: செந்தில் பாலாஜி எப்பொழுதுதான் அவரது தவறை ஏற்றுக் கொண்டுள்ளார்? நாளை மறுநாள் வரை காந்தியவாதி மாதிரி செந்தில் பாலாஜி பேசுவார்.. வேறு மாதிரி இருப்பார்.. 23ஆம் தேதி மக்கள் அவருடைய முகத்திரையை கிழிப்பார்கள். தேர்தல் ஆணையம் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும், தேர்தல் ஆணையம் இன்னும் அதிக ஆட்களை கொண்டு அவர்களது பணியை செய்ய வேண்டும் என வாக்காளர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை மாவட்டம் வடக்கு சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனின் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது. சிவசக்தி காலனி பகுதியில் இருசக்கர வாகன பேரணியுடன் வாக்கு சேகரிப்பு துவங்கியது. இப்பேரணியை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்து இருசக்கர வாகனத்தை இயக்கினார்.. வானதி சீனிவாசன் அவருடன் அமர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் நூற்றுக்கணக்கான பாஜக அதிமுக கூட்டணி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், "நிறைவு நாள் பிரச்சாரம் இரு சக்கர வாகன பேரணியுடன் துவங்குகிறது, கடந்த முறை போலவே கோவை மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
கோவையில் இரண்டு நாட்களாக கோவையில் கரூர் ரவுடி கும்பல் வாயிலாக காவல் துறையை மிரட்டுவது காவல் நிலையத்திலேயே ரகளை செய்வது எதிர்க்கட்சியினரை தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளார்கள் என்றும் கோவையை கொள்ளை அடிப்பதற்காக ஸ்டாலினால் அனுப்பப்பட்ட செந்தில் பாலாஜி ஆட்கள் அதனை அரங்கேற்றி வருகிறார்கள், கோவை மக்கள் தெளிவான முடிவை எடுப்பார்கள்.

திமுகவினர் ஒரு சில தொகுதிகளில் 2500 ரூபாயும் செந்தில் பாலாஜி போட்டியிடும் தெற்கு தொகுதியில் 5000 ரூபாயும் வாக்காளர்களுக்கு கொடுக்கிறார்கள்.. அந்த பணம் எல்லாம் எங்கிருந்து வந்தது? டாஸ்மாக்கில் கொள்ளையடித்த ஆயிரம் கோடி ரூபாய் பணம் மணல் மாஃபியா மூலம் கொள்ளையடிக்கப்பட்ட பணம்.
கோவையை கெடுப்பதற்காகவே திட்டமிட்டு கோவையை பழிவாங்குவதற்காகவே முதலமைச்சர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை அனுப்பி இந்த வித்தையை காட்டிக் கொண்டிருக்கிறார், கோவை மக்கள் ஸ்டாலினுக்கும் திமுகவிற்கும் பாடம் புகட்டுவார்கள்.
போதைப் பொருளால் ஆதாயம் அடைந்து அந்த பணத்தைக் கொண்டு எதிர்கால சந்ததியை தொலைத்து கொண்டிருக்கிறார்கள் என்றும் எனவே மக்கள் தெளிவாக வாக்களிக்க வேண்டும்" இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.
தொடர்ந்து பேட்டியளித்த அண்ணாமலை, "கோவையில் ராமநாதபுரம் காவல் நிலையத்தை பூட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசின் நிதியை கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும். வானதி சீனிவாசன் பணிச்சுமை அதிகரிக்கப் போகிறது.
தேர்தல் கணிப்புகள் எல்லாம் நமக்கு சாதகமாக வர ஆரம்பித்து விட்டது தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் கணிப்பு wave வை இன்னும் சரியாக கணிக்கவில்லை என்பது என்னுடைய கருத்து. மத்திய அரசின் நிதியை பயன்படுத்தக்கூடிய அரசு வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.. திமுக அராஜக அரசியலை வன்முறை அரசியலை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.. மக்கள் எப்பொழுதும் வாக்கு பெட்டியில் தான் பேசுவார்கள்.. அதனை ஏப்ரல் 23ஆம் தேதி பேச போகிறார்கள் .
செந்தில் பாலாஜி எப்பொழுதுதான் அவரது தவறை ஏற்றுக் கொண்டுள்ளார்? நாளை மறுநாள் வரை காந்தியவாதி மாதிரி செந்தில் பாலாஜி பேசுவார்.. ஆனால் வேறு மாதிரி இருப்பார்.. 23ஆம் தேதி மக்கள் அவருடைய முகத்திரையை கிழிப்பார்கள்.
தேர்தல் ஆணையம் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும், தேர்தல் ஆணையம் இன்னும் அதிக ஆட்களை கொண்டு அவர்களது பணியை செய்ய வேண்டும் என வாக்காளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.. மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டோர் தேவையில்லாதவர்களை மாவட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். வேட்புமனை தாக்கல் செய்த பொழுதே வானதி சீனிவாசன் வெற்றி உறுதியாகிவிட்டது, கோவை வடக்கு தொகுதியிலும் 5000 ரூபாய் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எவ்வளவுதான் பணம் கொடுத்தாலும் அது இந்த தேர்தலை பாதிக்காது" இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
-
3 மாதத்திற்குள் கட்சி லான்ச் ஆகும்.. பை-லாவை தயார் செய்யும் அண்ணாமலை.. மிகப்பெரிய முடிவு -
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன? -
"மாற்றத்தை விரும்பும் மக்கள் ஒன்னா சேருவோம்" மக்கள் மேடை இயக்கம் குறித்து லதா ரஜினிகாந்த் விளக்கம்! -
60,370 வேட்பாளர்கள்.. சக்ரவியூகம்.. அடித்து தூக்கிய அண்ணாமலை.. இதெல்லாம் எதிர்பார்க்காத வேகம் -
அண்ணாமலையுடன் இணையும் மாஜி டிஜிபி.. சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் யார்? -
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications